உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இயற்றமிழ் இலக்கணம்

9. எதிர்மறை வியங்கோள்வினை

85. எதிர்மறை வியங்கோள்வினை: அல் என்னும் எதிர்மறை நிலையும், க என்னும் விகுதியும் பெற்றுவரும்.

செ-யற்க, சொல்லற்க.

உ-ம்.

11.

கயவொடு ரவ்வொற் றீற்ற வியங்கோள்

டை

இயலும் இடம்பால் எங்கு மென்ப.

(நன்.சூ.338)

10.தன்மை முதலிய இடப்பெயர்கள் விரவி வருதல்

66. சில சொற்றொடர்களில் தன்மை முதலிய பல இடப்பெயர்கள் விரவி ஒரே வினையைப் பயனிலையாகக் கொண்டு முடியும்.

67. தன்மைப் பெயரோடு முன்னிலைப் பெயர் விரவின், அம், ஆம், என்னும் விகுதிகொண்ட தன்மைப் பன்மை வினைமுற்றுகளாலும், படர்க் கைப்பெயர் விரவின், எம், ஏம், ஓம் என்னும் விகுதிகொண்ட தன்மைப் பன்மை வினைமுற்றுகளாலும், முன்னிலை, படர்க்கை ஆகிய ஈரிடப் பெயர் களும் விரவின், கும், டும், தும், றும் என்னும் விகுதிகொண்ட தன்மைப் பன்மை வினைமுற்றுகளாலும் முடிக்கப்படும்.

இத் தன்மைப் பன்மை விகுதிகள், முன்னிலை, படர்க்கை என்னும் ஏனை ஈரிடத்தையும் தம்மோடு உளப்படுத்துகிறதனாலே, உளப்பாட்டுத் தன்மைப் பன்மை யென்று கூறப்படும்.

(உளப்பாடு -உட்படுத்தல்).

உ-ம். நானும் நீயும் பேசினம், பேசினாம்.

நானும் அவனும் பேசினெம், பேசுகின்றேம், பேசுவோம். நானும், நீயும், அவனும் காண்கும், கண்டும், காணுதும், சேறும்.

காண்கும் = காண்போம், கண்டும் = கண்டோம். காணுதும் = காண்போம், சேறும் = செல்வோம்.

12. அம்ஆம் என்பன முன்னிலை யாரையும் எம்ஏம் ஓம்இவை படர்க்கை யாரையும் உம்ஊர் கடதற இருபா லாரையும்

தன்னொடு படுக்கும் தன்மைப் பன்மை.

(நன்.சூ.332)