உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)

71

குறிப்பு: உலக வழக்கில் ஓம் என்னும் தன்மைப் பன்மை விகுதி ஒன்றே ஏனை யீரிடத்தையும் உளப்படுத்தும்.

உ-ம். நானும் நீயும் போனோம்.

நானும் அவனும் போனோம்.

நானும் நீயும் அவனும் போனோம்.

68. முன்னிலைப் பெயரோடு படர்க்கைப் பெயர் விரவின் முன்னி லைப் பன்மை வினைமுற்றாலேயே முடிக்கப்படும். இஃது உளப்பாட்டு முன் னிலைப் பன்மை என்று கூறப்படும்.

உ-ம்.

13.

நீயும் அவனும் போனீர், போனீர்கள்.

முன்னிலை கூடிய படர்க்கையும் முன்னிலை

(நன்.சூ.334)

11 இடைச்சொல்

ஏகார இடைச்சொல்

69. 'ஏ' என்னும் இடைச்சொல் பிரிநிலை, வினா, எண், ஈற்றசை, தேற் றம், இசைநிறை என்னும் ஆறு பொருள்களில் வரும்.

உ-ம்.

1. இவனே திருடினான் - இதில் ஏ என்பது ஒரு கூட்டத்தாருள்

ஒருவனைப் பிரித்து நிற்றலால் பிரிநிலை.

2. நீயே சொன்னா-? - இதில் நீயே என்பது நீயோ என்று வினாப் பொருள் தருதலால் ஏ, வினா.

3. அறமே. பொருளே, இன்பமே, வீடே எனப் பொருள் நான்கு - இதில் அறமும் பொருளும் இன்பமும் வீடும் என எண்ணுதலால், ஏ, எண்.

4.

'எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே' - இதில் ஏ ஈற்று அசையா- நிற்றலால், ஈற்றசை.

5. செ-யவே செ-தான் - இதில் ஏ தேற்றப் படுத்துகின்றமையால்,

6.

தேற்றம். (நிச்சயம்).

ஏ யே இவளொருத்தி பேடி! - இதில், பிற பொருளில்லாமல்

நிறைத்து நிற்றலால் இசைநிறை.

இசையை மட்டும்

ஏகாரம் விளி, வியப்பு, உயர்வு, இழிவு முதலிய பொருள்களில் வரு வது முண்டு.