உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

இயற்றமிழ் இலக்கணம்

உ-ம்.

14.

ஏ தம்பீ! - விளி. புலவர்க்கே தெரியாதே - உயர்வு.

ஏ அப்பா! - வியப்பு. சிறு பிள்ளையே செ-து விடுமே இழிவு.

பிரிநிலை வினாஎண் ஈற்றசை தேற்றம்

இசைநிறை எனஆறு ஏகா ரம்மே.

ஓகார இடைச்சொல்

(நன்.சூ.422)

70. 'ஓ' என்னும் இடைச்சொல் ஒழியிசை, வினா, சிறப்பு, எதிர்மறை, தெரிநிலை, கழிவு, அசைநிலை, பிரிநிலை என்னும் எட்டுப் பொருள்களில் வரும்.

உ-ம்.

1.

3.

படிக்கவோ வந்தா-? - இதில் படிக்கவோ என்பது படித்தற் கன்று; விளையாட வந்தா- என்று ஒழிந்த சொற்களைத் தருதலால், ஓ, ஒழியிசை. (இசை - சொல்).

2. நீயோ இராமன்? - இதில், ஓ வினாப் பொருள் தருதலால், வினா. ஓ ஓ கொடியது! கொடிதம்மா! - இதில் ஓ இழிவு சிறப்புப்பற்றி வந்தது. சிறப்பு - மிகுதி. ஓ ஓ பெரியர்! - இதில் ஓ உயர்வு சிறப்புப்பற்றி வந்தது.

4.

அவனோ கேட்பான் - இதில் அவன் கேளான் என்று

பொருள்படுதலால், ஓ எதிர்மறை.

5. அலியை நோக்கி, இது ஆணோ அதுவுமன்று; பெண்ணோ அதுவுமன்று என்றால் அலி என்பது தெரிய நிற்றலின், ஓ தெரிநிலை.

6.

7.

8.

ஓஓ

ஓ ஓ கெட்டேன்! - இதில் கழிந்த (கடந்த) செ-திக்கு வருந்து தலால், ஓ கழிவு.

பார்மினோ? இதில் ஓ வேறொரு பொருளுமின்றி அசையாகவே நிற்றலால், அசைநிலை.

கல் கனமானது, மணல் நிறையுள்ளது, மூடனுடைய மனமோ அவ் விரண்டினும் கனமானது - இதில் ஓ பல பொருள்களில் ஒன்றைப் பிரித்து நிற்றலால், பிரிநிலை.

ஓகாரம் ஐயம், ஓசை முதலிய பொருள்களிலும் வரும்.

உ-ம். அது கயிறோ, பாம்போ -

ஐயம்

ஓவென் றலறினான் - ஓசை.

15. ஒழியிசை வினாச்சிறப் பெதிர்மறை தெரிநிலை

கழிவசை நிலைபிரிப் பெனஎட் டோவே.

(நன். சூ.423)