உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)

உம்மை இடைச்சொல்

73

71. 'உம்' என்னும் இடைச்சொல் எதிர்மறை, சிறப்பு, ஐயம், எச்சம், முற்று, அளவை, தெரிநிலை, ஆக்கம் என்னும் எட்டுப் பொருளில் வரும்.

உம்மை என்பதில் ஐ சாரியை.

(எச்சம் இறந்தது தழீஇய எச்சம், எதிரது தழீஇய எச்சம் என இரு வகைப்படும். இறந்த (கடந்த) செ-தியைத் தழுவுவது இறந்தது தழீஇய எச் சம். எதிரும் (இனிமேல் வரும்) செ-தியைத் தழுவுவது எதிரது தழீஇய எச் சம். (தழீஇய -அளபெடை. எஞ்சுவது (குறைவது). எச்சம்).

உ-ம்.

உ-ம்.

1.

பாலும் உண்டான் இதில் பாலுண்ணுமுன் சோறும் உண்டான் என்று பொருள்படின் இறந்தது தழீஇய எச்சம். (பாலுண்டபின் சோறு முண்பான் என்று பொருள்படின், எதிரது தழீஇய எச்சம்).

நாள் தவறினும் நாத்தவறான் - இதில், நாள் தவறாது என்று பொருள்படுதலால், உம்மை எதிர்மறை.

2. புலவர்க்கும் எட்டாப் பொருள் - இதில் பல நூல்களையுங் கற்ற புலவர்க்கும் என்று புலவரை உயர்த்துதலால், உம் உயர்வுசிறப்பு. (சிறப்பு மிகுதி).

-

புலையனும் விரும்பாப் புன்புலால் யாக்கை - இதில் மாட்டிறைச் சியைத் தின்னும் புலையனும் என்று புலையனை இழிவு படுத்து தலால், உம் இழிவுசிறப்பு.

3. அது சிப்பியாகவும் இருக்கும்; வெள்ளியாகவு மிருக்கும் - இதில் ஒன்றைத் துணிந்து கூறாமையின் ஐயம்.

4. இராமனும் வருந்தினான் - இதில் இராமன் வருந்துமுன் இலக் குமணனும் வருந்தினான் என்று பொருள்படின் இறந்தது தழீஇய எச்சவும்மை; (இராமன் வருந்தினபின் இலக்குணமனும்

வருந்தினான் என்று பொருள்படின் எதிரது தழீஇய எச்ச வும்மை. 5. இரு கண்ணுஞ் சிவந்தன - இதில் உம் முற்றுப் பொருளைத் தருதலின் முற்றும்மை.

6. நிலமும், நீரும், தீயும், வளியும், வெளியுமெனப் பூதமைந்து - இதிற் பொருள்களை யெண்ணுதலால் எண்ணும்மை.

7. அலியை நோக்கி ஆணுமன்று, பெண்ணுமன்று என்று சொல்லின், அலியென்பது தெரிய நிற்றலின் தெரிநிலை.