உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

8.

இயற்றமிழ் இலக்கணம்

கோவிற்பட்டி நகருமாயிற்று - இதில் சிற்றூராயிருந்த கோவிற்பட்டி இப்போது நகராயிற்று. என்று ஆக்கப் பொருள் தருதலால் ஆக்கம். இனி, இதற்கு எதிராக, விஜயநகரம் சிற்றூருமாயிற்று. என்பதில், ஒருகாலத்தில் மாநகரமாயிருந்த விஜயநகரம்

இப்போது சிற்றூராயுள்ளது என்று பொருள்படுவது கேடு. உம்மை விரைவுப் பொருளிலும் வரும்.

உ-ம்.

வந்ததும் சென்றான்.

16.

எதிர்மறை சிறப்பையம் எச்சமுற் றளவை தெரிநிலை ஆக்கமோ டும்மை எட்டே.

12. உரிச்சொல்

(நன்.சூ.425)

72. உரிச்சொல் பெயரைத் தழுவின் பெயருரிச்சொல் என்றும், வினை யைத் தழுவின் வினையுரிச்சொல் என்றும் கூறப்படும்.

உ-ம்.

வடிவேல்

கழிமகிழ்ச்சி கடிநகர்

வடி, கழி, கடி பெயருரிச்சொற்கள்.

வடி = கூர்மை, கழி = மிகுதி, கடி = காவல்.

உ-ம்.

சால வுண்டான்.

நனி வளர்ந்தான்.

சால, நனி, தவ வினையுரிச்சொற்கள்.

தவப் பெற்றான்.

சால, நனி, தவ இம் மூன்றும் மிகுதிப் பொருளன.

13. பொதுவியல்

73. சொற்கள் பொருளுணர்த்தும் முறை குறிப்பு, வெளிப்படை என இருவகைப்படும். (குறிப்பு - மறைவு, வெளிப்படை - விளக்கம்).

குறிப்பு

74. ஒன்றொழி பொதுச்சொல், விகாரம், தகுதி, ஆகுபெயர், அன் மொழித்தொகை, குறிப்புவினை, முதற்குறிப்பு, தொகைக் குறிப்பு முதலிய பல சொற்கள் குறிப்பா-ப் பொருளுணர்த்தும்.

உ-ம்.

ஒன்றொழி பொதுச்சொல்: ஒன்றொழி பொதுச்சொல்லாவது: ஆண், பெண் என்னும் இருபாற்கும் பொதுவான சொல். அவற் றுள் ஒன்றை யொழித்து மற்றொன்றைக் காட்டுவது.