உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)

75

மாடு ஈன்றது இதில் மாடு என்பது காளையை நீக்கிப் பசுவைக் குறித்தது.

மக்கள் போர் செ-தார் - இதில் மக்கள் என்பது பெண்டிரை நீக்கி

ஆடவரைக் குறித்தது.

விகாரம்: விகாரமாவது சொல்லின் வேறுபாடு. அது வலித்தல், மெலித்தல், நீட்டல், குறுக்கல், விரித்தல், தொகுத்தல் என்னும் அறுவகை விகாரங்களும், முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை என்னும் மூவகைக் குறைகளுமாகும். இவை பெரும்பாலும் செ-யுட்கே யுரியன.

"கற்றா தரல்போல் கரவா தளிப்பரேல்

உற்றா ருலகத் தவர்"

-இதில் கற்றா (கன்று + ஆ)

என்பது கற்றா என வலித்தது.

"கன்றா-கன்றை யுடைய பசு

‘மரை மலர்' என்பதில் தாமரை முதற் குறைந்து மரை என நின்றது.

க்

தகுதி: தகுதி என்பது ஒருவகை வழக்கு. அது தகாத சொல்லை நீக் கித் தகுந்த சொல்லால் ஒரு பொருளைக் குறிப்பது. சாவு என்னும் அமங் கலச் சொல்லை நீக்கிப் பெரும்பிரிவு என்னும் சொல்லால் சாவைக் குறிப் பது தகுதி வழக்கு.

ஆகுபெயர்: ஆகுபெயராவது ஒரு பொருளின் பெயர் அதனோடு தொடர்புபட்ட மற்றொன்றுக்கு ஆகி வருவது.

காளை என்பது காளைபோன்ற வீரனைக் குறிப்பது ஆகுபெயர்.

அன்மொழித் தொகை: ஒரு தொகைச் சொல்லின் ஈற்றில் அல்லாத மொழி ஒன்று தொக்கு நிற்பது அன்மொழித் தொகை. பைந்தொடி வந்தாள் என்பதில் பைந்தொடி என்பது பசுமையான வளையல்களை யணிந்த பெண் ணைக் குறித்தது.

வினைக்குறிப்பு அல்லது குறிப்பு வினை: குறிப்பு வினையாவது குறிப்பாக வினையைக் காட்டும் சொல்.

பண்டு செல்வன் - இதில் பண்டு என்னும் குறிப்பால், செல்வன் என்னும் பெயர் செல்வனாயிருந்தான் என்று வினைப்பொருளைக் குறிப்பா-க் காட்டிற்று.

முதற்குறிப்பு: ஒரு நூலில் முதலாவதுள்ள சொல் அல்லது சொற் றொடர் அந் நூலைக் குறிப்பது முதற்குறிப்பாகும்.