உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இயற்றமிழ் இலக்கணம்

'கொன்றை வேந்தன்' என்னும் சொற்றொடர் ஔவையார் இயற்றிய ஒரு சிறு நீதிநூலில் முதலிலுள்ளதால், அந் நூலுக்கே பெயராயிற்று.

தொகைக் குறிப்பு: ஒரு தொகையினாலேயே அத் தொகையை யுடைய பொருளைக் குறிப்பது தொகைக் குறிப்பாகும்.

'உர னென்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான்' - இதில் ஐந்து என்னும் தொகை ஐம்புலன்களைக் குறித்தது.

பிறகுறிப்புகள்:

குழைகொண்டு கோழி யெறியும் வாழ்க்கையர் - செல்வர்;

குழை -காது நகை.

செஞ்செவியர் - நகை யணிந்த செவியர்.

கருங்கை - வேலையில் அடிப்பட்ட கை. பாயா வேங்கை - வேங்கைமரம். ஈர்ங்கை விதிராதவன் - உலோபி.

வெளிப்படை

பொருளுணர்த்தாத சொற்களெல்லாம் வெளிப்

75.குறிப்பாற்

படையாம்.

உ-ம்.

மரம், மாடு

வந்தான், சென்றான்.

17. ஒன்றொழி பொதுச்சொல் விகாரம் தகுதி ஆகு பெயர்அன் மொழிவினைக் குறிப்பே முதல்தொகை குறிப்போ டின்ன பிறவும் குறிப்பிற் றருமொழி அல்லன வெளிப்படை.

14 வழக்கியல்

(நன். சூ.269)

76. வழக்கியலாவது சொற்கள் வழங்கும் முறை, அஃது இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என இருவகைப்படும்.

-

(வழங்குவது வழக்கு வழங்குதல் - கூறுதல் அல்லது கூறப்படுதல்)

இயல்பு வழக்கு

77. இயல்பு வழக்காவது ஒரு பொருளுக்கு இயல்பாயுரிய சொல்லை அப் பொருளில் வழங்குவது.