உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)

78. இயல்பு வழக்கு இலக்கணமுடையது,

என மூவகைப்படும்.

77

லக்கணப்போலி, மரூஉ

79. இலக்கணமுடையது என்பது இலக்கண முறைப்படி சொற்கள் வழங்குவது.

உ-ம்.

மகன், மரம், மாடு, மண்.

வந்தான், சென்றான், நில்.

80. இலக்கணப்போலி என்பது இலக்கண மில்லாவிடினும், இலக் கண முடையதுபோலச் சான்றோரால் வழங்கப்படுவது. அது முறைமாற் றாகவும், உடம்படுமெ-ம் மாற்றாகவும் இருக்கும்.

-

முறைமாற்று சொற்கள் முன்பின்னாக முறைமாறி வருவது.

உ-ம். இல் + முன் = முன்னில் - முன்றில் - முற்றம்

இல் + வா- = வாயில் - வாயல்-வாசல்

நகர் + புறம் = புறநகர்

நுதல் + கண் = கண்ணுதல் (சிவபெருமான்)

சொற்கள் மட்டுமேயன்றி எழுத்துகளும் முறைமாறும்

உ-ம்.

MCP - CMP; Iஞிறு (வண்டு) - ஞிமிறு. உடம்படுமெ-ம் மாற்று, ஓருடம்படுமெ-க்கு மற்றோருடம்படு மெ-வருவது.

உ-ம்.

கோ + இல் = கோயில்

பொது + இல் = பொதியில்

வகர உடம்படு மெ-க்கு யகர உடம்படுமெ

81. மரூஉ என்பது சொற்கள் மருவி வழங்குவது. (மருவுதல் - விரிதல்.)

உ-ம்.

சொல்

மரூஉ

அருமை வந்த

அருமந்த

சோழநாடு

சோணாடு

தஞ்சாவூர்

தஞ்சை

பொழுது

போழ்து, போது

யார்

ஆர்

காமரு, காமர்

காமம் மருவு

தகுதி வழக்கு

82. தகுதி வழக்காவது சொல்லத்தகாத சொற்களை நீக்கிச் சொல்லத் தகுந்த சொற்களாற் பொருள்களைக் குறிப்பிப்பது.