உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

இயற்றமிழ் இலக்கணம்

83. அஃது இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி என மூவகைப்படும்.

84. இடக்கரடக்கல் என்பது இடக்கரான பொருளை நல்ல சொற் களால் அடக்கிச் சொல்லுதல்.

(இடக்கர் - தூஷணம், இழிசொல். இடக்கு இடக்கர்; அர் சாரியை.)

உ-ம். கால் கழுவி வந்தேன்.

ஒன்றுக்கு இரண்டுக்குப் போகும் இடம். வெளியே போயிருக்கிறார்.

85. மங்கலம் என்பது அமங்கலமான பொருள்களை மங்கலமான சொற்களாற் சொல்லுதல். (மங்கலம் - நன்மை)

உ-ம்.

அமங்கலப்பொருள்

செத்தார்

தாலியறுந்தது

மங்கலச்சொல்

சிவபதமடைந்தார், துஞ்சினார். தாலிபெருகிற்று.

மெ-, காயம்.

பொ-யான வுடம்பு

86. குழூஉக்குறி என்பது ஒரு குழுவார் பிறர்க்குப் பொருள் விளங்கா வண்ணம் மறைபொருளதாகத் தமக்குள்மட்டும் வழங்கும் குறி.

(குழூஉ -கூட்டம். குறி - சொல்.)

உ-ம்.

குழூஉ

குடியர்

வணிகர்

மருத்துவர்

18.

குழூஉக்குறி

கருப்பு

குணவெள்ளை

காட்டுத் திருடி

பொருள்

சாராயம்.

மூன்று ரூபா-. கள்ளி.

இலக்கண முடைய திலக்கணப் போலி

மரூஉஎன் றாகும் மூவபை இயல்பும் இடக்க ரடக்கல் மங்கலம் குழூஉக்குறி எனமுத் தகுதியோ டாறாம் வழக்கியல்.

புணரியல்

வேற்றுமைவழி, அல்வழி

(1560T. (.267)

ரு

87. புணர்ச்சி - வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி என இரு வகைப்படும்.

1. வேற்றுமைப் புணர்ச்சி

88. வேற்றுமைப் புணர்ச்சியாவது இருசொற்கள், இடையில் வேற்று மை தோன்றப் புணரும் புணர்ச்சி. அவ் வேற்றுமை உருபு தொக்கும், உருபு விரிந்தும் நிற்கும். உருபு தொக்கது வேற்றுமைத் தொகையென்றும், உருபு விரிந்தது வேற்றுமை விரி யென்றுங் கூறப்படும்.