உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)

79

89. வேற்றுமைத் தொகையும் வேற்றுமை விரியும் இரண்டாம் வேற் றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரை ஆறு வகைப்படும். முதல் வேற் றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபின்மையால், அவற்றுக்குத் தொகை விரிகள் இல்லை. அவை அல்வழியிற் சேர்க்கப்படும்.

உ-ம்.

வேற்றுமை இரண்டாம் வேற்றமை

தொகை சோறுண்டான்

கல்லெறிந்தான்

விரி

சோற்றையுண்டான்

கல்லாலெறிந்தான்

மூன்றாம் வேற்றுமை

நான்காம் வேற்றுமை

ஊர் போனான்

ஊருக்குப்போனான்

ஐந்தாம் வேற்றுமை

மலைவீழருவி

மலையின் வீழருவி

ஆறாம் வேற்றுமை

கடவுளருள்

கடவுளின் அருள்

ஏழாம் வேற்றுமை

ஊர் புகுந்தான்

ஊர்க்குட்புகுந்தான்

வேற்றுமை யுருபோடு வேறொரு சொல்லும் தொக்கு நிற்பின் உரு பும் பயனும் உடன்தொக்க தொகை எனப்படும்.

உ-ம்.

பாற்குடம் - பாலையுடைய குடம்; இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை.

2. அல்வழிப் புணர்ச்சி

90. அல்வழிப் புணர்ச்சியாவது வேற்றுமை அல்லாதவழிப் புணர்ச்சி.

91. அல்வழியிற் புணரும் தொடர்மொழிகள் தொகை நிலைத் தொட ரென்றும், தொகாநிலைத் தொடரென்றும் இருவகைப்படும்.

92. ஒரு தொடருக் கிடையில் ஏதேனும் ஒரு சொல் தொக்கு நின்றால், தொகைநிலைத்தொடர்; தொகாது நின்றால் தொகாநிலைத்தொடர். தொகை நிலைத்தொடர் தொகைநிலை என்றும், தொகையென்றும், தொகாநிலைத் தொடர் தொகாநிலை என்றும், தொடர் என்றும், சுருக்கிக் கூறப்படும்.

தொகைநிலைத் தொடர்

93. தொகைநிலைத் தொடர் வினைத்தொகை, பண்புத்தொகை, உவ மைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை என ஐந்து வகைப் படும்.

(1) வினைத்தொகை: பெயரெச்சம் பகுதியளவாக நின்று பெயரைத் தழுவுமாயின் வினைத்தொகையாம். இதில் இடைநிலையும் விகுதியும் தொக்கு வரும்.