உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

உ-ம்.

இயற்றமிழ் இலக்கணம்

வருவா-சுடுசோறு, குடிநீர், குளிர்காற்று.

வினைத்தொகை, இடைநிலை யின்மையால் முக்காலத்திற்கும்

பொதுவாயிருக்கும்.

உ-ம்.

உண்பொருள்

-

உண்ட பொருள்.

(2) பண்புத்தொகை

உண்கின்ற பொருள். உண்ணும் பொருள்.

-

(பண்புப் பெயருக்குப் பின்) ஆகிய என்னும்

பண்புருபு தொக்கு நிற்பது, பண்புத் தொகை.

உ-ம். செந்தமிழ்-செம்மையாகிய தமிழ்.

ஒரே பொருளில் இருபெயர் ஒன்று பொதுவும் ஒன்று சிறப்புமாக ஒட்டி வருவது இருபெயரொட்டுப் பண்புத் தொகையாம். இதில் சிறப்புப் பெயர் முன்னும், பொதுப்பெயர் பின்னுமிருக்கும்.

உ-ம்.

பனைமரம் - பனையாகிய மரம்.

(3) உவமைத்தொகை போல என்னும் உவமையுருபு தொக்கு நிற்பது உம்மைத் தொகை.

உ-ம்.

புலிபா-ந்தான் -புலிபோலப் பா-ந்தான்.

(4) உம்மைத்தொகை

உம் என்னும் இடைச்சொல் தொக்கு நிற்பது

உம்மைத் தொகை.

உ-ம்.

சேர சோழ பாண்டியர் - சேரனும் சோழனும் பாண்டியனும்.

(5) அன்மொழித் தொகை: அல்லாத மொழி தொக்கு நிற்பது அன் மொழித்தொகை. அது வேற்றுமைத் தொகை வினைத்தொகை முதலிய ஏனை ஐந்து தொகைகளின் அடியாகப் பிறக்கும்.

உ-ம். பூங்குழல் வந்தாள் - பூவையணிந்த குழலை யுடையவள் வந் தாள். பூங்குழல் என்பதில் உடையவள் என்னும் அல்லாத மொழி தொக்கது. இது வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை.

தொகாநிலைத் தொடர்

94. தொகாநிலைத் தொடர்: எழுவா-த் தொடர், விளித் தொடர், பெயரெச்சத் தொடர், வினையெச்சத் தொடர், தெரிநிலை வினைமுற்றுத் தொடர், குறிப்பு வினைமுற்றுத் தொடர், இடைச்சொற்றொடர், உரிச்சொற் றொடர், அடுக்குத்தொடர் என ஒன்பது வகைப்படும்.