உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)

1. எழுவா - முந்திவரின், எழுவா-த் தொடர். உ-ம். இராமன் வந்தான்.

2. விளிப்பெயர் முந்திவரின், விளித்தொடர். உ-ம். இராமா! வா.

3. பெயரெச்சம் முந்திவரின், பெயரெச்சத்தொடர். உ-ம். வந்த பையன்.

4. வினையெச்சம் முந்திவரின், வினையெச்சத்தொடர். உ-ம். கற்க வந்தான்.

5. தெரிநிலை வினைமுற்று முந்திவரின், தெரிநிலை வினைமுற்றுத் தொடர். வந்தான் இராமன்.

உ-ம்.

6. குறிப்பு வினைமுற்று முந்திவரின், குறிப்பு வினைமுற்றுத் தொடர். உ-ம். இல்லை பொருள்.

7. இடைச்சொல் முந்திவரின், இடைச்சொற்றொடர்.

உ-ம். மற்றொன்று.

8. உரிச்சொல் முந்திவரின், உரிச்சொற்றொடர். உ-ம்.

கழிநெடில்

9. சொற்கள் அடுக்கிவரின், அடுக்குத்தொடர். உ-ம்.

போ போ.

81

95. மேற்காட்டிய ஒன்பது தொடர்களுள் முதலெட்டும், தழுவு தொட ரும், இறுதியொன்றும் தழாத்தொடருமாகும். தழுவு தொடராவது, நிலை மொழி வருமொழியோடு இலக்கணத்திற் சம்பந்தப்பட்டிருப்பது. தழாத் தொடராவது அங்ஙனம் சம்பந்தப்படாதிருப்பது.

உ-ம். இராமன் வந்தான் - தழுவு தொடர். (எழுவா-த் தொடர்)

--

பாம்பு பாம்பு தழாத் தொடர் (அடுக்குத் தொடர்). வேற்றுமைத் தொடராறும், தொகைநிலைத் தொடர் ஐந்தும், தழுவு தொடர்களே. தொகை நிலைத் தொடர் ஐந்தும், தொகாநிலைத் தொடர் ஒன்பதுமாக மொத்தம் அல் வழித் தொடர்கள் பதினான்காகும்.

19.

வேற்றுமை ஐம்முதல் ஆறாம் அல்வழி தொழில்பண் புவமை உம்மை அன்மொழி எழுவா- விளிஈ ரெச்சம்முற் றிடையுரி தழுவு தொடர்அடுக் கெனஈ ரேழே.

(நன்.சூ.152)