உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

இயற்றமிழ் இலக்கணம்

சூத்திரத்தில், மற்றவற்றையெல்லாம் தழுவுதொடர் என்று கூறின தனால் அடுக்குத்தொடர், தழாத்தொடர் என்றறியப்படும்.

இயல்பு புணர்ச்சி

i. ஆகாரத்தின் முன் வல்லினம்

96. அல்வழியில், ஆ, மா, ஆமா என்னும் பெயர்களுக்கு முன்னும், மியா என்னும் முன்னிலை யசைக்கு முன்னும், ஆகாரவீற்று வினைமுற் றுக்கு முன்னும் வரும் வல்லினம் இயல்பாகும்.

ஆபசு. மா -விலங்கு, மான். ஆமா - காட்டுப்பசு.

உ-ம்.

ஆ + சிறிது = ஆசிறிது.

மா + பெரிது = மாபெரிது.

ஆமா + குறிது = ஆமா குறிது.

ஆ. மா, ஆமா முன் வலி இயல்பு.

கேண்மியா + சாத்தா = கேண்மியா. சாத்தா - மியாமுன் வலி இயல்பு. ஓடா + குதிரைகள் = ஓடா. குதிரைகள் - முற்றுமுன் வலி இயல்பு.

20. அல்வழி ஆமா மியாமுற்று முன்மிகா.

ii. குற்றியலுகரத்தின் முன் வல்லினம்

(நன். சூ. 171)

97. அல்வழியில் வன்றொடரொழிந்த மற்ற ஐந்து தொடர்க் குற்றிய லுகரத்தின் முன்னும் வரும் வல்லினம் இயல்பாம்.

-

உ-ம். மாடு + பா-ந்தது = மாடுபா-ந்தது நெடிற்றொடர்

அஃது + சென்றது = அஃது சென்றது -ஆ-தத்தொடர்.

தராசு + தாழ்ந்தது = தராசு தாழ்ந்தது - உயிர்த்தொடர். வண்டு + கரிது = வண்டு கரிது - மென்றொடர்.

சார்பு + தீர்ந்தது = சார்பு தீர்ந்தது - இடைத்தொடர்.

98. மென்றொடர்க் குற்றியலுகர மொழிகள் இடப்பொருளுணர்த்தும் சுட்டுச்சொற்களும், வினாச் சொற்களுமாயின், வருமொழி முதலிலுள்ள வல்லினம் மிகும்.

உ-ம்.

அங்குச் சென்றான்.

எங்குச் சென்றான்.

எங்குப் பெற்றான்?

யாங்குப் பெற்றான்?