உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)

83

99. அல்வழியில், வன்றொடர்க் குற்றியலுகரத்தின் முன் வரும் வல்

லினம் மிகும்.

உ-ம்.

எழுத்து + தெரியும் = எழுத்துத் தெரியும்.

பட்டு + கொண்டான் = பட்டுக்கொண்டான்.

21. வன்றொட ரல்லன முன்மிகா அல்வழி

(நன். சூ.181)

100. வேற்றுமை வழியில் இடைத்தொடர், ஆ-தத் தொடர், ஒற்று இடையில் மிகாத நெடிற்றொடர், ஒற்று இடையில் மிகாத உயிர்த்தொடர் ஆகிய இவற்றுக்கு முன் வரும் வல்லினம் இயல்பாம். (ஒற்று -மெ-.)

உ-ம்

சார்பு + கெடுத்தான் = சார்புகொடுத்தான். - இடைத்தொடர். பஃது + கொடு = பஃதுகொடு -ஆ-தத்தொடர்.

மாது + கற்பு = மாது கற்பு - நெடிற்றொடர்.

வரகு + கொ-தான் = வரகு கொ-தான் - உயிர்த்தொடர்.

101. வேற்றுமை வழியில் வன்றொடர் மென்றொடர் முன்னும், ஒற்று இடையில் மிகும் நெடிற்றொடர் உயிர்த்தொடர் முன்னும் வரும் வல்லினம் மிகும்.

உ-ம்.

பட்டு + சட்டை = பட்டுச் சட்டை - வன்றொடர். வண்டு + கால் = வண்டுக் கால் - மென்றொடர்.

காடு + பன்றி = காட்டுப் பன்றி - நெடிற்றொடர்.

-

கயிறு + பை = கயிற்றுப் பை உயிர்த்தொடர்.

102. வன்றொடர்க் குற்றியலுகர மொழிகள் பெயர்ச்சொற்களாயிருப் பின் அவற்றின் முன் வரும் வலி மிகும்; ஏவல் வினைச்சொற்களாயிருப் பின், வலி இயல்பாம்.

உ-ம்.

நாட்டுப்பொருள் - பெயர்.

நாட்டுபொருள் - வினைத்தொகை அல்லது ஏவல் வினை.

22. இடைத்தொடர் ஆ-தத்தொடர்ஒற் றிடையின் மிகாநெடில் உயிர்த்தொடர் முன்மிகா வேற்றுமை

iii. பொதுப்பெயர் உயர்திணைப் பெயர்களின்முன் வல்லினம்

(நன். சூ. 182)

103. இருவழியிலும் இருதிணைப் பொதுப்பெயர்கட்கும் உயர்திணைப் பெயர்கட்கும் ஈற்றிலுள்ள மெ-கள், வலிவரின் இயல்பாம்; அப் பெயர் களின் ஈற்றிலுள்ள உயிரின் முன்னும் யகர ரகர மெ-களின் முன்னும் வரும் வலி மிகா; சில உயர்திணைப் பெயர்கள் நாற்கணமும் வரப் பலவாறு விகாரப் படுவது முண்டு.