உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

இயற்றமிழ் இலக்கணம்

நாற்கணம் வன்கணம், மென்கணம், இடைக்கணம், உயிர்க்கணம்

என்பன.

அல்வழி

உ-ம்.

ஆண் + பெரியன் = ஆண் பெரியன்.

பெண் + சிறிது = பெண் சிறிது.

சாத்தன் + கரியன் = சாத்தன் கரியன்.

சாத்தன் + குறிது = சாத்தன் குறிது.

வேற்றுமை வழி

ஆண் + குரல் = ஆண்குரல்.

பெண் + கை = பெண் கை.

சாத்தன் + பலகை = சாத்தன் பலகை.

சாத்தன் + பக்கம் = சாத்தன் பக்கம்.

பொதுப்பெய ரீற்றுமெ- வலிவர இயல்பாயின.

அல்வழி

மகள் + சென்றாள் = மகள் சென்றாள்.

அரசன் + பணித்தான் = அரசன் பணித்தான்.

வேற்றுமை வழி

குரிசில் + கை = குரிசில் கை.

+

தையல் + குணம் = தையல் குணம்.

உயர்திணைப் பெயரீற்று மெ வலிவர இயல்பாயின.

அல்வழி

பிள்ளை + படித்தான் = பிள்ளை படித்தான்.

தா + பறந்தது = தாபறந்தது.

நீர் + சென்றீர் = நீர் சென்றீர்.

வேற்றுமை வழி

சாத்தி + படிப்பு = சாத்தி படிப்பு. சாத்தி + திறமை = சாத்தி திறமை. தா + பேச்சு = தா-பேச்சு.

தா - + பெருமை = தா - பெருமை.

பொதுப்பெயரீற்று உயிர், ய, ர முன் வலி மிகாவாயின.