உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)

அல்வழி

நம்பி + சென்றான் = நம்பி சென்றான். சே + படித்தான் = சே-படித்தான். புலவர் + பாடினார் = புலவர் பாடினார்.

வேற்றுமை வழி

நம்பி + பொருள் = நம்பிபொருள்.

சே + திறமை = சே-திறமை

புலவர் + பெருமை = புலவர்பெருமை.

உயர்திணைப் பெயரீற்று உயிர் ய ர முன் வலி மிகாவாயின.

அல்வழி

பாண்டியன் + அரசன் = பாண்டியவரசன்.

சேரன் + சோழன் = சேரசோழர்.

=

சடையப்பன் + வள்ளல் = சடையப்பவள்ளல்

வேற்றுமை வழி

தமிழர் + அரசு = தமிழவரசு, தமிழரசு.

மகள் + பேச்சு = மகட்பேச்சு.

கம்பன் + ராமாயணம் = கம்ப ராமாயணம்.

உயர்திணைப் பெயர்கள் நாற்கணத்தின் முன் பலவாறு விகாரமாயின.

85

குறிப்பு: சாத்தன், சாத்தி யென்ற உயர்திணைப் பெயர்கள் முன்காலத் தில் முறையே ஒரு காளைக்கும், ஒரு பசுவிற்கும் வழங்கி வந்தமையாற் பொதுப்பெயராயின.

23. பொதுப்பெயர் உயர்திணைப் பெயர்க ளீற்றுமெ-

வலிவரின் இயல்பாம்; ஆவி யரமுன்

வன்மை மிகாசில விகாரமாம் உயர்திணை.

(நன்.சூ.159)

i. மிகுதல்

விகாரப் புணர்ச்சி

1. எகர வினா முன்னும் முச்சுட்டின் முன்னும் நாற்கணமும் புணர்தல்.

104. எகர வினாவின் முன்னும், முச்சுட்டின் முன்னும், உயிரும் யகர மும் வரின், இடையில் வகரமெ- தோன்றும்; பிறமெ-கள் வரின், அவ்வம் மெ-கள் மிகும்; செ-யுளிற் சுட்டு நீளின். வகரமெ வருமிடத்து யகர மெ- தோன்றும்.