உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இயற்றமிழ் இலக்கணம்

சுட்டெழுத்துகளும், வினாவெழுத்துகளும் இடைச்சொற்களாத லின், அவை புணரும் புணர்ச்சியெல்லாம் அல்வழியே யாகும்.

உ-ம்.

எ + இடம் = எவ்விடம்?

அ + உயிர் = அவ்வுயிர் ) + அணி = இவ்வணி

எ + யானை = எவ்யானை அ + யானை = அவ்யானை இ + யானை = இவ்யானை

உ + யானை = உவ்யானை

எ + குலம் = எக்குலம்? அ + படி = அப்படி இ + மாடு = இம்மாடு

உ + வகை = உவ்வகை

அ + இடை = ஆயிடை.

எகர வினா முன்னும்,முச்சுட்டின் முன்னும் உயிர் வர வகரம் தோன்றிற்று.

எகர வினா முன்னும், முச்சுட்டின் முன்னும் யகரம் வர வகரம் தோன்றிற்று.

எகர வினா முன்னும், முச்சுட்டின் முன்னும் பிற மெ-கள் வந்து மிக்கன. செ-யுளிற் சுட்டு நீண்டு யகரமெ- தோன்றிற்று.

24. எகர வினாமுச் சுட்டின் முன்னர் உயிரும் யகரமும் எ-தின் வவ்வும், பிறவரின் அவையும்; தூக்கிற் சுட்டு நீளின் யகரமும், தோன்றுதல் நெறியே.

ii. சில உயிரீற்று மரப்பெயர் முன் வல்லினம்

(நன். சூ.163)

105. வேற்றுமை வழியில், சில மரப்பெயர்கள் முன் வலிவரின், அதற் கின மெல்லினம் தோன்றும்.

உ-ம்.

மா + கா = மாங்கா-

விளா + பழம் = விளாம்பழம்.

25.

மரப்பெபயர் முன்னர் இனமெல் லெழுத்து வரப்பெறு னவுமுள வேற்றுமை வழியே.

(நன். சூ.

166)

2. கெடுதல்

அத்துச் சாரியையின் முதல் கெடுதல்:

106. நிலைமொழி யீற்றிலுள்ள அகரவுயிர் முன் அத்துச் சாரியையின் அகரங் கெடும்.

உ-ம்.

மர(ம்) + அத்து = மரத்து. =

பட்டின (ம்) + அத்து = பட்டினத்து.

26. அத்தின் அகரம் அகரமுனை இல்லை.

(நன். சூ.252)