உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)

5. இயல்பு புணர்ச்சியும் விகாரப்புணர்ச்சியும்

1. ணகர னகர ஈறு

1. திரிதலும் இயல்பும்

87

107. வேற்றுமை வழியில் நிலைமொழியீற்றிலுள்ள ணகர னகரங்கள், வருமொழி முதலில் வல்லினம் வரின், முறையே டகரமாகவும், றகரமாக வும் திரியும்; மெல்லினமும், இடையினமும் வரின் இயல்பாகும்; அல்வழி யில் மூவின மெ-கள் வரினும் இயல்பேயாகும்.

உ-ம்.

மண் + குடம் = மட்குடம்.

பொன் + தகடு = பொற்றகடு.}

மண் + மேடு = மண்மேடு.

மண் + வேலை = மண்வேலை.

பொன் + மலர் = பொன்மலர். பொன் + விலை = பொன்விலை.

மண் + பொரிந்தது = மண்பொரிந்தது. மண் + மறைந்தது = மண் மறைந்தது. மண் + வெடித்தது = மண்வெடித்தது. பொன்+பெருத்தது = பொன்பெருத்தது பொன் + மலர்ந்தது = பொன் மலர்ந்தது பொன் + விளைந்தது = பொன்விளைந்தது.

வேற்றுமை வழியில் ண, ன,

வல்லினம் வர, ட, ற ஆயின.

வேற்றுமை வழியில் ண, ன, மெல்லினமும் இடையினமும் வரஇயல்பாயின.

27. ணனவல் லினம்வாட் டறவும் பிறவரின் இயல்பும் ஆகும் வேற்றுமைக்கு, அல்வழிக் களைத்துமெ- வரினும் இயல்பா கும்மே.

11. லகர ளகர ஈறு

அல்வழியில் ணன மூவினமும் வர இயல்பாயின.

(நன்.சூ.209)

108. வேற்றுமை வழியில் நிலைமொழியீற்றிலுள்ள லகர ளகர மெ- கள், வருமொழி முதலில் வல்லினம் வரின் முறையே றகரமாகவும் டகர மாகவும் திரியும்; அல்வழியில் விகற்பமாக வரும்; இருவழியிலும், மெல் லினம் வரின், முறையே ன, ண ஆகத் திரியும்: இடையினம் வரின் இயல்பாம்.

விகற்பம் விகற்பித்தல், அதாவது இயல்பாகவும் விகாரமாகவும் வருதல்.