உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

உ-ம். கல் + குடம் = கற்குடம்.

கள் + குடம் = கட்குடம்.

இயற்றமிழ் இலக்கணம்

வேற்றுமை வழியில், ல,ள வலி வர ற ட வாகத் திரிந்தன.

கால் + பெரிது = கால்பெரிது, காற்பெரிது. வாள் + பெரிது = வாள்பெரிது, வாட்பெரிது.

கல் + மனை = கன்மனை முள் + மரம் = + மரம் = முண்மரம்.

கல் + மறைந்தது = கன்மறைந்தது.

அல்வழியில், ல, ள வலிவர விகற்பித்தன.

வேற்றுமைவழி

இருவழியிலும்

28.

முள் + முறிந்தது = முண்முறிந்தது.

அல்வழி

ல, ள மெலிவர னண வாகத் திரிந்தன.

வேற்றுமை வழி - இருவழியிலும்

ல ள, இடையினம்

கல் + யானை = கல்யானை

=

முள் + வளர்ச்சி = முள்வளர்ச்சி

கல் + யாது = கல்யாது

முள் + வளரும் = முள்வளரும்

} அல்வழி

வர இயல்பாயின.

லளவேற் றுமையில் றடவும் அல்வழி

அவற்றோ டுறழ்வும் வலிவரின் ஆம்மெலி மேவின் னணவும், இடைவரின் இயல்பும் ஆகும் இருவழி யானும் என்ப.

iii. தன், என், நின் என்பவற்றின் முன் வல்லினம்

(நன். சூ.227)

109. தன், என் என்னும் பெயர்களின் இறுதியிலுள்ள னகரம் வலி வரின் தனக்கின வல்லினமான றகரத்தோடு உறழும். (அதாவது றகரமாகத் திரிந்தும் திரியாது மிருக்கும்); நின் என்பதன் ஈறு வலிவரின் பெரும்பாலும் இயல்பாம். ஆகவே சிறுபான்மை திரியும். (உறழ்ச்சி, விகற்பம் என்பன ஒரு பொருட் சொற்கள்.)

தன், என், நின் என்பவை தான், யான், நீ என்பவற்றின் வேற்றுமைத் திரிபாதலால், இவை புணரும் புணர்ச்சி வேற்றுமைவழி யென்றறியப்படும்.

உ-ம்.

தன் + செயல் = தன்செயல், தற்செயல்.

என் + குணம் = என்குணம், எற்குணம்.

+

னகரம் வலிவர உறழ்ந்தது.

நின் + புகழ் = நின்புகழ் - நின் ஈறு வலிவர இயல்பாயிற்று.

நின் + புகழ்தல் = நிற்புகழ்தல் - நின் ஈறு வலிவரத் திரிந்தது.

29. தன்என் என்பவற் றீற்றுனவ் வன்மையோ

டுறழும்; நின்னீ றியல்பாம் உறவே.

(நன். சூ.218)