உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

முகவுரை

இவ்வுலகில் எத்தனையோ நாகரிகங்கள் சொல்லப் படினும், அவையெல்லாம் கீழை நாகரிகம், மேலை நாகரிகம் என இரண்டாய் அடங்கும். இவ்விரண்டுள், முன்னது முந்தியது; தமிழரது: பின்னுது பிந்தியது; ஆங்கிலரது.

சேம்சு வாட்டு (james Watt) என்னும் ஆங்கிலேயர் 1765 ஆம் ஆண்டு நீராவிச் சூழ்ச்சியத்தைக் கண்டுபிடித்ததிலிருந்து, தற்கால நாகரிகம் தொடங்குகின்றது. அதற்கு முந்தியதெல்லாம் முற்கால நாகரிகமாகும். இன்று புகைவண்டி பல நாடுகளிற் செய்யப்படினும், முதன் முதலாய்ச் செய்யப்பெற்ற ஆங்கில நாட்டு வண்டியே அவற்றிற்கெல்லாம் மூலமாகும். அது போன்றே. நாற்றிசையிலும் பல்வேறு நாடுகளில் பழங்கால நாகரிகம் இருந் திருப்பினும், அவற்றிற் கெல்லாம் தமிழ நாகரிகமே மூலமாகும்.

நீராவியும் மின்னாற்றலுங் கொண்டு செய்யப்பெறும் பொறி (Machine) வினையும் சூழ்ச்சிய (Engine) வினையும் இக்கால நாகரிகமென்றும்; கையாலும் விலங்காலுமே செய்யப்பட்ட வேலைப்பாடு முற்கால நாகரிகம் என்றும், வேறுபாடறிதல் வேண்டும்.

சிலர், தற்புகழ்ச்சி பற்றி, நாகரிகம் என்னும் சொல்லை எளிதாகவும் குறுகிய நோக்கோடும் ஆள்வர். இட வேறுபாடும் மொழி வேறுபாடும் பற்றி நாகரிகம் பல்வேறு வகைப்பட்டு விடாது. ஒவ்வொரு நாட்டரசாட்சியும் ஒரு தனிநாகரிகமன்று. மேனாடுகளுள் முதன்முதல் நாகரிகமடைந்தது எகிப்து (Egypt). அதன் தொடக்கம் கி.மு. 4000 ஆண்டுகட்குமுன், அதற்கும் முந்தியது தமிழ் நாகரிகம். அதன் தோற்றம் கி.மு. 10,000 ஆண்டு கட்குமுன். ஆகவே, தமிழ் நாகரிகமே உலகில் முதன்முதல் தோன்றியதாகும். தமிழின் முதுபழந்தொன்மையும், தமிழன் பிறந்தகம் குமரிக்கண்டம் என்னும் உண்மையும் இதை வலியுறுத்தும்.

இங்ஙனமிருப்பவும் ஆரியச் சூழ்ச்சியாலும் ஆரிய வருகைக்குப் பிற்பட்ட மூவேந்தரின் பேதைமையாலும், பல்