உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

xi

வகைப்பட்ட கொண்டான்மாரின் (வையாபுரிகளின்) காட்டிக் கொடுப்பாலும், தமிழ் நாகரிகம் மேனாட்டார்க்குத் தெரிந்த அளவுகூடத் தமிழர்க்குத் தெரியாது மறையுண்டு கிடக்கின்றது. இவ்விரங்கத்தக்க நிலைமை தமிழரின் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையாயிருத்தலால், இதை நீக்குதற் பொருட்டு இந் நூலை எழுதத் துணிந்தேன். இற்றைத் தமிழருள் நூற்றிற் கெண்பதின்மர் தற்குறிகளும் தாய்மொழியுணர்ச்சி யில்லாதவருமாயிருப்பனும், புதுத்தலைமுறையாக முளைவிட்டுக் கிளர்ந்தெழும் தமழ மாணவமணிகளேனும், இதைக் கருத்தூன்றிப் படித்துத் தம் முன்னோரின் நாகரிகப் பண்பாட்டைப் புதுக்கிப் போற்றிக் காப்பாராக.

இந்நூல் ஆரியர் வருகைக்கு முற்பட்ட தமிழநாகரிகத்தையே கூறவதாயிருப்பினும், முதலிரு கழக நூல்களும் அழிந்தும் அழியுண்டும் போனமையாலும், முற்கால நாகரிகத் தொடர்ச்சியே பிற்கால நாகரிகமுமாதலாலும், இலக்கியச் சான்றுகளெல்லாம் பிற்கால நூல்களினின்றும் கல்வெட்டுக் களினின்றுமே

காட்டப்பெறும் என அறிக.

இந்நூலை இயன்ற விரைவில் சீருஞ் செவ்வையுமாக அச்சிட்த்தந்த சீவன் அச்சகர்த்தார்க்கு நெஞ்சார நன்றி கூறுகின்றேன்.

அல்லும் பகலும் அருணா சலமென்னும் நல்லிறையன் மெய்ப்பு நவைநீங்க ஒல்லும் வகையால் திருந்திய வாறன்றோ இந்நூல்

தகையால் விளக்குந் தகை.

காட்டுப்பாடி.

ஞா. தேவநேயன்

1997.