உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

எட்டுதல் உயர்தல். எட்டம் உயரம். எட்டி உயர்ந்தோன். எட்டி-செட்டி (முதன்மெய்ப்பேறு).

ஒ. நோ: ஏண் - சேண். ஏமம் - சேமம். செட்டியின் தன்மை செட்டு.

சிரேஷ்டி என்னும் வடசொல், திரு என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபான ச்ரீ(ஸ்ரீ) என்பதன் உச்சத்தர (Superlative degree) வடிவினின்று

திரிந்ததாகும்.

ஒப்புத்தரம்

உறழ்தரம்

ச்ரேயஸ்

ச்ரீ (ஸ்ரீ) நிலவாணிகம்

உச்சத்தரம்

ச்ரேஷ்ட

நிலவாணிகர் வணிகப் பண்டங்களைக் குதிரைகள் மேலும் கோவேறு கழுதைகள் மேலும் ஏற்றிக்கொண்டு கூட்டங் கூட்டமாய்க் காட்டு வழியே தமிழகத்தையடுத்த வடுக நாட்டிற்கும், நெடுந் தொலைவான வடநாட்டிற்கும், காவற் படையுடன் சென்று ஏராளமாய்ப் பொருளீட்டி வந்தனர். அவ்வணிகக் கூட்டங்கட்குச் சாத்து என்று பெயர். சாத்து கூட்டம். சார்த்து சாத்து. சார்தல் சேர்தல்.

சாத்து= 1. கூட்டம்.

"சுரிவளைச் சாத்து நிறைமதி தவழும்

2.வணிகக் கூட்டம்.

"சாத்தொடு போந்து தனித்துய ருழந்தேன்"

(கல்.63,32)

(சிலப்.11,190)

சாத்து என்பது வடமொழியில் ஸார்த்த என்று திரியும்.

வணிகச் சாத்துக்களின் காவல் தெய்வமாகிய ஐயனார்க்குச் சாத்தன் என்று பெயர். அதனால். வணிகர்க்குச் சாத்தன் சாத்துவன் என்னும் பெயர்கள் இயற்பெயராய் வழங்கின. ஐயனார் கோயிலில், வணிகச் சாத்தைக் குறித்தற்கு மண்குதிரை யுருவங்கள் செய்து வைத்திருத்தலைக் காண்க. சாத்தன் என்னும் தெய்வப் பெயர் வடமொழியில் சாஸ்தா எனத் திரியும்.

இனி, வணிகச் சாத்தின் தலைவனும் சாத்தன் எனப்படுவான். இப்பெயரும் ஸார்த்த என்றே வடமொழியில் திரியும். இதனால், வடமொழியில் சாத்தைக் குறிக்கும் சொற்கும் சாத்தின் தலைவனைக் குறிக்கும் சொற்கும் வேறுபாடின்மையும், சாத்தன் என்னும் தெய்வத்தைக் குறிக்கும் சொல் வேறுபட்டிருப்பதும், கண்டு உண்மை தெளிக.

66

குல்லைக் கண்ணி வடுகர் முனையது

பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்