உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

95

வணிகம் என்பது வணிஜ் என்றும், வாணிகம் என்பது வாணிஜ்ய என்றும், வடமொழியில் திரியும்.

நாட்டிற்கு உள்ளிருந்து ஆட்சியைச் செவ்வையாய்ச் செய்தற்கு ஒரு மருதநிலத் தலைநகரும், நாட்டோரத்திற் கடற்கரையிலிருந்து நீர் வணிகத்தை ஊக்குதற்கு ஒரு நெய்தல் தலைநகருமாக, இரு தலைநகரை மூவேந்தரும் தொன்றுதொட்டுக் கொண்டிருந்தனர்.

வேந்தன் மருதத்தலைநகர் நெய்தல்தலைநகர்

பாண்டியன்

சோழன்

சேரன்

மதுரை உறையூர்

கருவூர் (கரூர்)

கொற்கை

புகார் (காவிரிப்பூம்பட்டினம்)

வஞ்சி

முதலிரு கழக நூல்களும் முற்றும் அழிந்து போனமையால், பாண்டியரின் இடைக்கழகக்கால மருதநிலத் தலைநகரும் தலைக்கழகக்கால நெய்தல் நிலத்தலைநகரும், அறியப்படவில்லை. சேரர் கொங்குநாட்டை இழந்த பின்னர், வஞ்சிக்கே கருவூர்ப் பெயரை இட்டுக் கொண்டனர்.

கோநகர்களிலும் துறைநகர்களிலும் இருந்து நில வணிகமும் நீர் வணிகமும் செய்து வந்த நகரத்தார் அல்லது நகர மாந்தர் என்னும் வகுப்பினரை, எண்பேராயங்களுள் ஓராயமாகக்கொண்டு, அவரை மன்னர் பின்னோர் என்று சிறப்பித்தும், அவருள் தலைமையானவர்க்கு எட்டிப் பட்டம் வழங்கியும், மூவேந்தரும் ஊக்கிவந்தனர்.

எட்டிப்பட்டச் சின்னமாக ஒரு பொற்பூ அளிக்கப் பெறும்.

"எட்டிப்பூப் பெற்று

(மணி. 22: 113)

எட்டிப்பட்டம், அதைப்பெற்ற வணிகனின் மனைவிக்கும், அல்லது மகட்கும் மதிப்புரவுப் பட்டமாக (Title of Courtesy) வழங்கி வந்ததாகப் பெருங்கதை கூறும்.

எட்டி காவிதிப் பட்டந் தாங்கிய

மயிலியன் மாதர்"

(பெருங். இலாவா. 3:144)

எட்டிப் பட்டத்தார்க்கு, எட்டிப்புரவு என்னும் நிலமானியமும் அளிக்கப்பட்டதாக மயிலைநாதர் உரை குறிக்கும் (நன். 158).

"கோடியும் தேடிக் கொடிமரமும் நட்டி"

என்னும் உலக வழக்குத் தொடர் மொழியால், கோடிப் பொன் தேடிய செல்வர்க்குக் கொடியும் ஒன்று கொடுக்கப்பட்டதாகத் தெரிகின்றது.