உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்”

(சிலப். 6:141)

66

வான மூன்றிய மதலை போல

ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி

விண்பொர நிவந்த வேயா மாடத்து

இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி

உரவுநீர் அழுவத் தோடுகலங் கரையும்

துறை."

(பெரும்பாண்.349-51)

(கடற்கரை, உள்நாட்டை நோக்க மிகத் தாழ்ந்த மட்டத்திலிருப் பதால், துறைநகர்களெல்லாம் பட்டினம் எனப்பட்டன.

பதிதல் தாழ்ந்திருத்தல். பள்ளமான நிலத்தைப் பதிந்த நிலம் என்பர்.

பதி + அனம் = பதனம் - பத்தனம் - பட்டனம் - பட்டினம்.

தகரம் டகரமாவது பெருவழக்கு.

ஒ. நோ: கொத்து மண்வெட்டி - கொட்டு மண்வெட்டி.

களைக்கொத்து - களைக்கொட்டு.

பொத்து - பொட்டு பொருத்து.

வீரத்தானம்(வ.)-வீரட்டானம்

பதனம் - படனம் = நோயாளியைப் பாதுகாத்தல்

இனி, பதனம் என்பது, கலங்கள் காற்றினாலும் கொள்ளைக் காரராலும் சேதமின்றிப் பாதுகாப்பாயிருக்குமிடம் என்றுமாம்.

பதனம் = பாதுகாப்பு.

பட்டினம் என்பதைப் பட்டணம் என்பது உலக வழக்கு. இக் காலத்திற் பட்டணம் என்பது சென்னையைச் சிறப்பாய்க் குறித்தல் போல், அக்காலத்தில் பட்டினம் என்பது புகாரைச் சிறப்பாய் குறித்தது. பட்டினப்பாலை, பட்டினத்துப் பிள்ளையார் என்னும் வழக்குக்களை நோக்குக.

ஒரு திணைக்கும் சிறப்பாயுரியதன்றி நகரப் பொதுப்பெயராய் வழங்கும் பதி என்னும் சொல், மக்கள் பதிவாய்(நிலையாய்) இருக்கும் இடத்தைக் குறிக்கும். பதிதல் நிலையாய்க் குடியிருத்தல்.

கப்பல்கள் துறைமுகத்திற்கு வந்து சேரும்போதும் அதைவிட்டுப் புறப்படும்போதும், முரசங்கள் முழக்கப்பட்டன.

இன்னிசை முரசமுழங்கப்

பொன்மலிந்த விழுப்பண்டம்