உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

நாடால நன்கிழிதரும்

ஆடியற் பெருநாவாய்"

99

(மதுரை.80-83)

கப்பலில் வந்த பொருள்கள் கழிகளில் இயங்கும் தோணிகளாற் கரை

சேர்க்கப்பட்டன.

55

கலந்தந்த பொற்பரிசம்

கழித்தோணியாற் கரைசேர்க்குந்து”

(புறம்.343:5-6)

அக்காலத்திற் காவிரியாறு அகன்றும் ஆழ்ந்தும் இருந்ததால், பெருங்கப்பல்களும் கடலில் நிற்காது நேரே ஆற்று முகத்திற் புகுந்தன.

.......கூம்பொடு

மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது

புகாஅர்ப் புகுந்த பெருங்கலம்"

(புறம்.30:10-12)

"பாய் களையாது பரந்தோண்டாதென்பதனால், துறை நன்மை கூறியவாறாம்" என்று பழைய வுரை கூறுதல் காண்க. கரிகால் வளவன் காவிரிக்குக் கரை கட்டியது இங்குக் கருதத்தக்கது.

நீர் வணிகம் நிரம்ப நடைபெற்றதால், துறைமுகத்தில் எந்நேரமும் கப்பல்கள் நிறைந்திருந்தன.

" வெளிவிளங்கும் களிறுபோலத்

தீம்புகார்த் திரைமுன்றுறைத்

தூங்குநாவாய் துவன்றிருக்கை”

(பட்டினப். 172-74)

ஏற்றுமதியும் இறக்குமதியும் ஏராளமாயிருந்ததால், நாள்தோறும் ஆயத்துறைக் கணக்கர் முடைகளை நிறுத்து உலகு (சுங்கம்) வாங்கி வேந்தன் முத்திரையைப் பொறித்துக் குன்றுபோற் குவித்து வைத் திருந்தனர். அவற்றிக்குக் கடுமையான காவலிருந்தது.

வைகல்தொறும் அசைவின்றி உல்குசெயக் குறைபடாது

....

நீரினின்று நிலத்தேற்றவும் நிலத்தினின்று நீர்ப்ப

அளந்தறியாப் பலபண்டம்

வரம்பறியாமை வந்தீண்டி

அருங்கடிப் பெருங்காப்பின் வலியுடை வல்லணங்கினோன்

புலிபொறித்துப் புறம்போக்கி மதிநிறைந்த மலிபண்டம்