உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

"மாடக்குச் சித்திரமும்” என்னும் நன்னூற் பொதுப்பாயிரத் தொடரும், "சுவரை வைத்துக்கொண்டன்றோ சித்திரமெழுத வேண்டும்?” என்னும் பழமொழியும், மாடச்சுவர்களிலெல்லாம் அக்காலத்தில் ஓவியம் வரையப் பெற்றிருந்தமையை அறிவிக்கும்.

" வம்ப மாக்கள் கம்பலை மூதூர்ச்

சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும்

மையறு படிவத்து வானவர் முதலா

எவ்வகை உயிர்களும் உவமம் சாட்டி

வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய

கண்கவர் ஓவியம் கண்டுநிற் குநரும்"

என்று மணிமேகலை (3:126-131) கூறுதல் காண்க.

ஒருவன் ஓர் அரசனது அவைக்களம் சென்று அங்கு அரசன் தன்

அமைச்சருடன் அமர்ந்திருந்ததைக்

கண்டு, தான்

கொண்டுவந்த

காணிக்கையை நீட்ட அரசன் அதை வாங்காமையால் நெருங்கிச் சென்று அது ஓர் ஓவியமாயிருக்கக் கண்டானென்று, ஒரு கதை வழங்கி வருகின்றது. அத்தகைய ஓவியத்திறவோர் அக்காலத்திருந்தனர்.

ஓவியக்காரைரைக் கண்ணுள் வினைஞர் என்று சிலப்பதிகாரம் கூறும் (5:30). ஆடை அணிகலம் கட்டிடம் முதலிய எல்லாப் பொருளும் ஓவிய வேலைப்படுள்ளன வாயிருந்தன.

(7) உருவம் (Sculpture)

மண்ணால் உருவஞ் செய்பவர் மண்ணீட்டாளர்

(LD60fl.28:37)

மரத்தாலும் கல்லாலும் பொன்வகையாலும் உருவஞ்செய்பவர்

கம்மியர்; சாந்தினாற் செய்பவர் கொத்தர்

"கம்மியநூல் தொல்வரம் பெல்லை கண்டு

"

(திருவிளை, திருநகங்.38)

கோயில் தேரும் கோபுரமும் உருவங்கள் நிறைந்தவை. பாவை யுருவமும் பூதப்படிமையும் புகாரிலும் பிறநகர்களிலும் இருந்தன. (8) கட்டிடம்

மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் மணி மண்டபங்களும், மூவேந்தர் தலைநகர்களிலும் கோநகர்களிலும் மிகுந்திருந்தன.

மாளிகை, கோபுரம், மணி, மண்டபம் என்னும் நாற்சொல்லும் தென்சொல்லே.