உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

125

மந்திரம் பாம்புக்கடியுண்டவன் கலுழனை (கருடனை) உள்ளுவது ஊழ்கம். அவன் தன்னைக் கலுழனாகவே கருதுவது பாணிப்பு.

"திடங்கொள் மந்திரம் தியானபா வகநிலை முட்டி”

(பெரிய பு.34:1060)

"மணிமந்திரமாதியால் வேண்டு சித்திகள்" (தாயுமபரிபூ.9)

சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேர லிரும் பொறையைக் கண்டவுடன், நரிவெரூஉத்தலையார் நல்லுடம்பு பெற்றதாக, 5-ஆம் புறப்பாட்டின் கொளுக்கூறும், இது, கண்ட மாலையை (Scrofula) அரசன் தொடின் குணமாகுமென்று கருதி அதற்கு ‘அரசன் தீங்கு' (King's evil) என்று ஆங்கிலேயர் பெயரிட்ட தனோடு ஒப்பு நோக்கத்தக்கது.

(5)மணிநோட்டம் (இரத்தினப்பரீட்சை)

65

காக பாதமும் களங்கமும் விந்துவும் ஏகையும் நீங்கி இயல்பிற் குன்றா நூலவர் நொடித்த நுழைநுண் கோடி நால்வகை வருணத்து நலங்கேழ் ஒளியவும் ஏகையும் மாலையும் இருளொடு துறந்த பாசார் மேனிப் பசுங்கதிர் ஒளியவும் விதிமுறை பிழையா விளங்கிய சாதியும் பூச உருவின் பொலந்தெளித் தனையவும் தீதறு கதிரொளித் தெண்மகட் டுருவவும் இருள்தெளித் தனையவும் இருவே ருருவவும் ஒருமைத் தோற்றத் தைவேறு வனப்பின் இலங்குநீர் வீடூஉம் நலங்கெழு மணிகளும் காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும் தோற்றிய குற்றம் துகளறத் துணிந்தவும் சந்திர குருவே அங்கா ரகனென

வந்த நீர்மைய வட்டத் தொகுதியும்

கருப்பத் துளையவும் கல்லிடை முடங்கலும்

திருக்கு நீங்கிய செங்கொடி வல்லியும்

என்னும் சிலப்பதிகாரப் பகுதி (14:180-198), மணிகளின் குணங் குற்றங்

களை எடுத்துக் கூறுதல் காண்க.

6. ஓவியம்

"ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும்”

என்பது (மணி 2:32), ஓவியநூலைத் தெரிவிக்கும்.