உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

மருத்துவத்தின் இன்றியமையாமை யறிந்தே, பண்டைக் காலத்தில் ஊர்மருத்துவனுக்கு இறையிலி நிலம் மானியமாக விடப்பட்டது. அது மருத்துவப்பேறு எனப்பட்டது. (S.I.1,.43).

உலகிற் சிறந்த சித்தமருத்துவம், ஊக்குவாரின்றி நாளுக்கு நாள் மறைந்தும் குறைந்தும் வருகின்றது.

குழந்தை மருத்துவம், பேறுகால மருத்துவம், அரசமருத்துவம் (விலக்கமற்றது), நஞ்சு மருத்துவம். மாட்டு மருத்துவம் என்பன, சித்த மருத்துவத்தின் சிறப்புக் கூறுகளாகும். விலக்கம் பத்தியம்.

நீர்,கருக்கு (கசாயம்) குழம்பு, நெய் அல்லது எண்ணெய் (கிருதம்) களிம்பு, மெழுகு (லேகியம்), குளிகை, நீறு (பஸ்பம்) முதலிய பல வடிவிலும் சித்த மருந்துகள் உண்டு. ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு புறத்தை உரசும் மாத்திரைக் கட்டிகளும் உள.

குளிகை - குளிகா(வ.)செந்தூள் - செந்தூளம் - செந்தூரம் -சிந்தூரம் – ஸிந்தூர(வ.)

மருத்துவனுக்குப் பண்டிதன் என்றும், மருத்துவத்திற்குப் பண்டிதம் என்றும், பெயருண்டு. மருந்து கொடுப்பவன் மருத்துவன்; பல்பொருள் களை அறிந்தவன் பண்டிதன். பண்டிதன் என்பது பண்டுவன் என்றும், பண்டிதம் என்பது பண்டுவம் என்றும், மருவும்.

பண்டுவம் (Medical Treatment) மருத்துவப் பண்டுவம் என்றும் நம்பிக்கைப் பண்டுவம் (Faith cure) என்றும், இருதிறப்படும். பாம்புக்கடி யுண்டவனுக்குக் கடிவாயில் பாம்புணிக் கருங்கல் வைப்பதும், எருக்கம் பூவைத் தின்னக் கொடுப்பதும், மூக்கிற் பச்சிலைச்சாறு பிழிவதும், மருத்துவப் பண்டுவம்; மந்திரத்தினால் நஞ்சையிறக்குவது நம்பிக்கைப் பண்டுவம்.

நம்பிக்கைப் பண்டுவம், இறும்பூது (Miracle), நேர்த்திக்கடன்; குளிசம் (Amulet), மணி, பார்வை,மந்திரம், ஊழ்கம் (தியானம்), பாணிப்பு (பாவகம்), முட்டி, அரசக் காட்சி முதலியனவாகப் பலவகைப்படும்.

இயேசு பெருமான் தொழு (குட்ட) நோயாளியைத் தொட்டு நலப்படுத்தியதும், திருஞான சம்பந்தர் கூன் பாண்டியன் சுரநோயைத் தீர்த்ததும். இறம்பூது வழிபடுதெய்வத்தைநோக்கி, ஒன்று படைப்பதாக அல்லது செய்வதாக நேர்ந்து கொள்வது நேர்த்திக்கடன், மந்திர எழுத்துள்ள தகட்டைக் கையிற் கட்டிக் கொள்வது குளிசம். உருத்திராக்கம், துழாய் (துளசி) மணி, முத்துமாலை முதலிய அணிகள் மணியாகும். மந்திரிகன் தேட்கொட்டுப் பட்டவனை அல்லது பாம்புக்கடியுண்டவனைப் பார்த்துக் குழையடித்து மந்திரிப்பது பார்வை. நஞ்சேறியவனே மந்திரத்தை ஓதுவது