உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

123

ஆரிய மருத்துவம் வேர்களை மிகுதியாகக் கொண்ட தென்றும், சித்த மருத்துவம் செந்தூரத்தை மிகுதியாகக்கொண்ட தென்றும், சிலர் கூறுவர். அவர் அறியார். "வேர்பார், தழைபார், மெல்ல மெல்லச் செந்தூரச் சுண்ணம் பார்." என்பது சித்தமருத்துவப் பழமொழியாகும். "ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை மருத்துவன்.” என்பது “ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை மருத்துவன்” என்றும் வழங்கும். சிறுபஞ்சமூலம், பெரும்பஞ்சமூலம் என்னும் ஈரைந்து வேர்களும், தமிழ் நாட்டிலேயே விளையும் தமிழ் மருந்துச் சரக்காம். மருந்து என்னும் பெயரே மணமுள்ள வேரையும் தழையையும் தான் குறிக்கும். மரு = மணம். மரு - மருந்து.

சித்த மருத்துவத்தின் சிறந்த மருந்து, மூவகை உப்புச் சேர்ந்த முப்பு என்பதாகும். அது இரும்பு முதலியவற்றைப் பொன்னாக்கவும் ஓரிலக்கம் ஆண்டுகள் உயிர்வாழச் செய்யவும் வல்லதென, அதன் ஆற்றலை உயர்வு நவிற்சியாகக் கூறுவர்.

"நெடு நாளிருந்த பேரும், நிலையாகவேயினும் காயகற்பந்தேடி நெஞ்சு புண்ணாவர்." என்று தாயுமானவர் கூறியது, மூப்பை நோக்கித்தான் போலும்!

அறுவை (Surgery) முறையும் சித்தமருத்துவத்திலிருந்தமை

" மீன்தேர் கொட்பிற் பனிக்கயம் மூழ்கிச் சிரல்பெயர்ந் தன்ன நெடுவெள் ளூசி நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் அம்புசேர் உடம்பினர்”

(பதிற்.42:2-5)

(கயம் மூழ்கிச் சிரல் பெயர்ந்தன்ன நெடவெள்ளூசி = குளத்திலே முழு சிச்சிலிக் குருவி எழுகின்றகாலத்து அதன் வாயலகைப்போல, புண்களை நூலால்தைக்கும் போது அப்புண்ணின் அரத்தத்தில் மறைந்தெழுகின்ற நீண்ட வெள்ளையான ஊசி. நெடுவசி = நீண்ட ஊசித்தழும்பு. வடு = காய்ப்பு.)

என்னும் பதிற்றுப்பத்தடிகளாலும்,

66

66

உடலிடைத் தோன்றிற் றென்றை யறுத்ததன் உதிர மூற்றிச் சுடலுறச் சுட்டுவேறோர் மருந்தனால் துயரம் தீர்வர்”

ஆரார் தலைவணங்கார் ஆரார்தம் கையெடார் ஆரார்தாம் சத்திரத்தில் ஆறாதார் - சீராரும் தென்புலியூர் மேவும் சிவனருள்சேர் அம்பட்டத் தம்பிபுகான் வாசலிலே தான்.'

99

என்னும் கம்பர் பாட்டுக்களாலும் அறியப்படும்.

(கம்பரா. கும்ப.146)