உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

(3) மடைநூல்:

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

மடை = சோறு, உணவு. மடைநூல் சமையல் நூல்.

"கந்துகக் கருத்தும் மடைநூற் செய்தியும்”

என்பது தமிழில் மட நூலிருந்தமையைத் தெரிவிக்கும்.

(LD 600l. 2:22)

66

காவெரி யூட்டிய கவர்கணைத் தூணிப்

பூவிரி கச்சைப் புகழோன் தன்முன் பனிவரை மார்பன் பயந்த நுண்பொருட் பனுவலின் வழாஅப் பல்வே றடிசில்"

என்று சிறுபாணாற்றுப்படை(238-41) கூறும் வீமன் மடைநூல், தமிழ் மடை நூலைத் தழுவியதேயென்பது அதன் பின்மையாலும், அவன் பாண்டியர் குடியான திங்கள் மரபினனாயிருந்தமையாலும். அறியப்படும். நளனும் திங்கள் மரபினனே.

(4) மருத்துவம்.

தமிழ் மருத்துவக் கலை சித்தரால் வளர்க்கப்பெற்றது. அதனால் அது சித்த மருத்துவம் எனப்பெறும். கட்டிகளையும் பிளவைகளையும் கரைப்பதும், ஒடிந்த எலும்பை ஒட்டவைப்பதும், முதியவரை இளைஞராக்குவதும், நூற்றுக் கணக்கான ஆண்டுகள் வாழ்விப்பதும், சித்தமருத்துவம்.

66

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்னிய மூன்று."

(குறள். 941)

ஆதலால், ஊதை (வாதம்) பித்தம் கோழை என்னும் முந்நாடியையும் நாடி அதனால், இற்றைக் கருவிகளைக் கொண்டு தலைசிறந்த தேர்ச்சி பெற்ற மேலை மருத்துவரும் கண்டுபிடிக்க முடியாத,

66

நோய்நாடி நோய்முதல் நாடி யதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்"

சித்த மருத்துவனின் தெய்வத்திறமாம்.

நுள் - நள் - நாளம் - நாளி நாழி - நாடி.

-

(குறள்.648)

நாடி பார்க்கும் திறமில்லாதான் மருந்தனே யன்றி மருத்துவ னாகான். இந்திய மருத்துவம் சித்தமருத்துவமே. ஆயுர்வேதம் என்னும் ஆரிய மருத்துவம், சித்த மருத்துவத்தின் வடநாட்டுவகையே. சேர வேந்தர் இருந்தவரை சித்த மருத்துவமாயிருந்த மலையாள மருத்துவம், இன்று ஆரிய மருத்துவமாய் மாறியிருத்தல் காண்க. ஒரே நோய்க்குப் பல மருந்துகள் உள. மருந்துகள் இடந்தோறும் வேறுபடும், ஆயின்,மருத்துவமுறை ஒன்றே.