உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

தொல்கதைஞர் (புராணிகர்) ஒரு கதையைக் கட்டிவிட்டனர்.

66

"தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே"

தமிழ்நிலை பெடற்ற தாங்கரு மரபின்

மகிழ்நனை மறுகின் மதுரை”

(புறம்.58:13)

(AMILIIT GODT.66-7)

இனி, கூடல்நகர் என்பது நாளடைவில் கூடல் எனக் குறுகிற்று எனினுமாம்.

மதுரைநகர்வாயில், இடைவிடாது ஒழுகிய வைகையாறு போல் அகன்றும், இடையறாத மக்கள் போக்குவரத்து மிகுந்தும், இருந்தது. மழையாடு மலையின் நிவந்த மாடமொடு

66

வையை யன்ன வழக்குடை வாயில்”

என்று மதுரைக்காஞ்சி (355-6) கூறுதல் காண்க.

"கோபுர மன்றி வாசலை மாடமாகவுஞ் சமைத்தலின், மாடமென்றார்." என்னும் நச்சினார்க்கினியர் சிறப்புரை இங்குக் கவனிக்கத்தக்கது.

அரசனுக்குரிய சிறப்புக்களெல்லாம் இறைவனுக்கும் செய்யப் பெற்ற தினால், கோயில்தேர் மிகப் பெரிதாய்ச் செய்யப்பெற்றதுபோல், கோயில் மதிற் கோபுரமும் மிகப்பெரிய எழுநிலை வானளாவியாகக் கட்டப்பெற்றது. அதன் அமைப்பும் தேரை ஒத்ததாகும். அதன் எழுநிலைகளும் தேரின் எழுதட்டுக்களைப் போன்றவை. எழுநிலை அல்லது எழுதட்டுக் கருத்து ஏழுலகம் என்னும் கருத்தினின்று தோன்றியது. ஏழுலகக் கருத்தும் எழுதீவுக் கருத்தினின்று தோன்றியதாகும்.

"ஏழுடையான் பொழில்” (திருக்கோவை. 7)

தச்சுக் கலையில் கோயில்தேர்போல், கட்டிடக் கலையில் கோயிற் கோபுரம் பண்டைத் தமிழரின் அறிவையும் ஆற்றலையும் சிறப்பக்காட்டும். தஞ்சைப் பெருவுடையார் கோயிற் கோபுரத்திற்கு, 10 கல் தொலைவுலுள்ள சாரப்பள்ளம் என்னும் இடத்திலிருந்து சாரம் கட்டியதாகவும், கடைகாலில் ஒழுகிய நீர்த்துளைகளை அடைத்தற்குக் குறவை மீன்களைப் பிடித்து விட்டதாகவும், கூறுவர்.

தண்புனல் பரந்த பூசல் மண்மறுத்து

மீனீற் செறுக்கும் யாணர்ப்

பயன்திகழ் வைப்பிற்பிறர் அகன்றலை நாடே”

என்பது (புறம்:7) தஞ்சை நிகழ்ச்சியை ஒருவாறு நினைவுறுத்தும். மணி = 1. ஒளிக்கல், 2. நீல ஒளிக்கல்.