உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

129

இவ்விரு பொருள்களுள் முதலாவது மண்ணுதல் என்னும் வினை யினின்றும், இரண்டாவது மள்குதல் என்னும் வினையி னினின்றும், தோன்றியவை யாகும். அழகு என்பது இவ்விரண்டி னின்றும் தோன்றிய வழிப்பொருள்.

மண்ணுதல் கழுவுதல். மண்ணப்பட்டது மண்ணி. மண்ணி - மணி.

"மண்ணி யறிப மணிநலம்”

"மண்ணுறு மணியும்"

(நான்மணி.5)

(பெருங்.2-5:123)

ஆடு.

மள்குதல் = கருத்தல், ஒளி மழுங்குதல். மள்கு - மட்கு - மக்கு. மள் -(மய்) - மை = கருமை, கருமுகில், கரிய ஒ.நோ:வள் (கூர்மை)- (வய்)-வை = கூர்மை மல் - மால் = கருமை, கருமுகில், கரிய திருமால். மால்-மாரி = மழை. மா - மாயோன் = கரியோன். மால் - மாரி = மழை, முகில்.

மள் - மழை =

மள்

-

மழை = மாரி, முகில்.

மண் மணி =

-

கரிய(நீல) ஒளிக்கல். கருமையும் நீலமும்

ஒன்றாய்க் கொள்ளப் படுவதை, காளி, நீலி; காளகண்டன், நீலகண்டன்; கார்வண்ணன், நீலவண்ணன்; கருநாகம், நீல நாகம்; முதலிய சொல்லிணை களால் அறிக.

மண்டுதல் = நெருங்குதல், கூடுதல், மிகுதல், நிறைதல். மண்டு

மண்டி = பொருள்கள் நிறைந்து கிடக்கும் சரக்கு நிலையம்.

மண்டு - மண்டகம் = மக்கள் கூடும் மடம் அல்லது அம்பலம்.

மண்டகம் - மண்டபம் - மண்டப(வ.)

ஒ.நோ: வாணிகம் வாணிபம்.

இன்றும் மண்டகம், மண்டகப்படி என்பதே உலக வழக்கு.

மண்டபங்களுள் நூற்றுக்கால் மண்டபங்களும் ஆயிரக்கால் மண்டபங் களும் இருந்தன.

மாடங்களின் முகப்பில் புலியுருவம் அமைக்கப்பட்டும், புலித்தொடர் என்னும் சங்கிலி தொங்கவிடப்பட்டும், இருந்தன.

"புலிமுக மாட மலிர வேறி” (பெருங். இலாவாண, 9, 69)

-