உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

Chemistry என்னும் சொல் தோன்றியிருத்தலால், கெமிய நூலை ரஸாயனம் என்றனர். இம்முறையில் அதைத் தமிழில் இதளியம் எனலாம்.

பொன்னாக்கம் எகிபது (Egypt) நாட்டில் வழங்கியதால், அக்கலை அரபியில் அல்கிமிய (al - kimia) எனப்பட்டதென்றும், அல் என்பது அந்த என்று பொருள்படும் சுட்டுச் சொல்லென்றும், கிமிய என்பது எகிபது நாட்டின் பெயரென்றும், எருதந்துறை ஆங்கிலச் சுருக்க அகர முதலி கூறும். (The Concise Oxford Dictionary of Current English).

“அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பேரும் நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்” என்று தாயுமானவர் பாடுவதால் (பரிபூர.10), இதள் மாற்றியக் கலை தமிழ் நாட்டில் இருந்தமை அறியப்படும்.

பொதுவாக, இது சித்தர் கலையெனப்படும். இராமலிங்க அடிகள் சித்தநிலையடைந்திருந்ததினால் இக்கலையை அறிந்திருந்தனர். (12) மற நூல்

தனிமக்கள் போர், படைமக்கள் போர் எனப்போர் இரு திறப்படும். சிலம்பம், மற்போர், குத்துச் சண்டை, வாட்போர் முதலியன தனி மக்கள் போராம்.

முக்காவல் நாட்டு ஆமூர்மல்லனைப் பொருது கொன்ற கோப்பெரு நற்கிள்ளி, ஒரு போரவை நடத்தி வந்தான்; அதனால், போரவைக் கோப்பெரு நற்கிள்ளி எனப்பட்டான். அவன் நடத்தி வந்தது மற்பயிற்சிக் களரி. மற்போரில், சில உயிர் நாடியான நரம்புகளைத் தொட்டு, எதிரியை வீழ்த்திக் கொல்லவும், வீழ்ந்தவனை மூன்றே முக்கால் நாழிகைக்குள் எழச்செய்யவும், சில மருமப் பிடிகள் உள.

மற்களரி, விற்கௗரி, வாட்களரி எனப் போரவை அல்லது முரண்கௗரி பலவகைப் படும்.

66

இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார், இகலினர் எறிந்த அகலிலை முருக்கின் பெருமரக் கம்பம்”

(புறம். 169:9-11)

என்பதிலிருந்து, எய்படை எறிபடை முதலிய படைக்கலப் பயிற்சி நடைபெற்ற வகையை அறியலாம்.

பட்டது.

குதிரைப் படைப் பயிற்சி நடைபெற்ற களம் செண்டு வெளி யெனப்

கரி பரி தேர் கால் ஆகிய நால்வகைப் படைப் போரையும் பற்றிய தமிழ் நூல்கள் இறந்து பட்டன.