உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

133

செய்திருக்கலாமாதலாலும், இற்றை வானூர்திக் கொப்பான மயிற் பொறியை யவனர் செய்ததாகத் தேவர் கூறாமையானும், சிந்தாமணிக் கூற்று கொள்ளத் தக்கதன் றென்றும், அதனால் பண்டைத் தமிழப் பொறிவினைக் கம்மியர்க்கு இழுக்கில்லையென்றும், கூறிவிடுக்க.

(10) பொன்நூல்

சாத ரூபம் கிளிச்சிறை ஆடகம்

சாம்பூ நதமென ஓங்கிய கொள்கை'

99

என்பது (சிலப். 14: 201-2), பொன்னின் வகைகளைக் காட்டும்.

ஜாத ரூப்ப என்னும் வடசொல் பொலிந்த வடிவம் என்றும், ஹாட்டக என்னும் வடசொல் ஒளிர்வது என்றும் பொருள்படும். இவற்றைப் பொன் என்றும் தங்கம் என்றும் சொல்லலாம். ஜம்பூநத என்னும் வடசொல், பொன் (மேரு) மலைக்கு வடக்கில் நாவற் பழச்சாறு பெருகியோடுவதாய்க் கருதப்பட்ட ஆற்றின் பெயர். இது ஆரியத் தொல்கதைக் கொள்கை. இதன்படி, சாம்பூ நதத்தை நாவலாறை என்று சொல்லல் வேண்டும்.

பண்டைத் தமிழ்மக்களின் ஏமாறுந்தன்மையைப் பயன்படுத்திக் கொண்டு, ஆரியர் இங்ஙனமே எல்லாத் துறைகளிலும் தமிழ்நாட்டுப் பொருள்கட்கு வடசொற் பெயர்களையிட்கு வழக்காற்றுப் படுத்தியிருக் கின்றனர்.

பொன் என்பது, பொன்போன்ற பிற கனியப் பொருள்களையுங் குறிக்கும்.

வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் முதலிய பிற கனியங்களும் பண்டைத் தமிழர்க்குத் தெரிந்திருந்தன. ஈயம் என்பது இளகுவது என்னும் பொருளது.

ஈயம் ஸீஸ (வ.). இள் - (இய்) - ஈ - ஈயம்,

ஒ.நோ: எள் -எய். எய்த்தல் இளைத்தல்.

வெண்கலம் தமிழர், முதன் முதல் அமைத்த கலவைக் கனிய மாகத் தோன்றுகின்றது. அதன் ஒரு சொற்பெயர் உறை, முறி என்பன.

(11) இதள் மாற்றியம் (இரசவாதம்)

சித்தர் இதளினால் (பாதரசத்தால்) தாழ்ந்த கனியங்களை (உலோகங் களை) வெள்ளியாகவும் சிறப்பாகப் பொன்னாகவும் மாற்றினதாக, மருத்துவ நூல்கள் கூறும். அப்பொன்னாக்கம் வடமொழியில் (இ)ரச வாதம் எனப்படும். அக்கலையைக் குறிக்கும் Alchemy என்னும் சொல்லிலிருந்து