உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

பொறி, குடப் பாம்பு, சகடப்பொறி, தகர்ப்பொறி, அரிநூற்பொறி என்பர்.

"முழுமுதலரணம்" (புறத்.10) என்றும், "வருபகை பேணார் ஆரெயில்”(புறத். 12) என்றும், தொல்காப்பியம் கூறுவது, மிளையும் (காவற்காடும்) அகழியும் சூழ்ந்து பல்வேறு பொறிகளைக் கொண்ட சோவரணையே.

66

மாற்றவர் மறப்படை மலைந்துமதில் பற்றின்

நூற்றுவரைக் கொல்வியொடு நூக்கியெறி பொறியும் தோற்றமுறு பேய்களிறு துற்றுபெரும் பாம்பும்

கூற்றம் அன கழுகுதொடர் குந்தமொடு கோள்மா.

C

விற்பொறிகள் வெய்யவிடு குதிரைதொடர் அயில்வாள் கற்பொறிகள் பாவையன மாடம்அடு செந்தீக்

66

66

கொற்புனைசெய் கொள்ளிபெருங் கொக்கெழில்செய் கூகை நற்றலைகள் திருக்கும்வலி நெருக்கும்மர நிலையே.

செம்புருகு வெங்களிகன் உமிழ்வதிரிந் தெங்கும்

வெம்புருக வட்டுமிழ்வ வெந்நெய்முகந் துமிழ்வச அம்புமிழ்வ வேலுமிழ்வ கல்லுமிழ்வ ஆகித்

தம்புலங்க ளால்யவனர் தாட்படுத்த பொறியே.

கரும்பொனியல் பன்றிகத நாகம்விடு சகடம்

குரங்குபொரு தகரினொடு கூர்ந்தரிவ நுண்ணூல்

பரந்தபசும் பொற்கொடி பதாகையொடு கொழிக்கும் திருந்துமதில் தெவ்வர்தலை பனிப்பத்திருந் தின்றே."

என்னும் சிந்தாமணிச் செய்யுள்கட்கு (1:101-4)

"பொற்கொடிகள் பதாகையோடு கொழிக்கும் திருந்துமதில், மாற்றவர் மறப்படை அகழைக் கடந்து தன்னைப் பற்றின், அத்தெவ்வர்தலை பனிக்கும்படி நூற்றுவரைக்கொல்லி முதல் மரநிலையீறாக வுள்ளவையும், செம்புருகுகளி முதலியவற்றை உமிழ்வனவாக யவனர் தாட்படுத்த பொறிகளும், பன்றி முதல் நுண்ணூலீறாக வுள்ளவையும், திருந்திற்றென்க." என்று நச்சினார்க் கினியர் உரை வரைந்துள்ளபடி, 103-ஆம் செய்யுளிற் குறிப்பிட்டுள்ள பொறிகளையே யவனர் செய்ததாகத் திருத்தக்க தேவர் கூறியுள்ளார். அவை பிறவற்றைப் போல் அத்துணைச் சிறந்தன வல்ல வாதலாலும், திருத்தக்க தேவர்க்கு ஏழு நூற்றாண்டுகள் முந்திய இளங்கோவடிகள் அங்ஙனம் கூறாமையானும், சிலப்பதிகாரம் போல் சிந்தாமணி உண்மைக் கதையைத் தழுவாமையானும், தமிழர் கிரேக்கருக்கு முற்பட்ட இனத் தாராதலாலும், மேலை மருத்துவத்தை மேலையரிடம் கற்ற கீழையர் மேலை நாடுகளிலும் பணியாற்றுவது போல் யவனர் சில பொறிகள்