உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

131

சோ என்பது அரண்வகையே யன்றிச் சோணிதபுரம் என்னும் நகர்ப் பெயரன்று.

பாம்புரி, கொத்தளம் (Bastion), வாயிற் கோபுரம் பதணம் (Rampart), ஞாயில் முதலிய பல வுறுப்புகளை யுடையது. கோட்டை மதில். சில நகர்களில் ஏழெயில்கள் இருந்தன. புறமதிலைச் சுற்றி அகழி இருந்தது.

கோநகர்களைப் பகையரசர் முற்றுகையிட்ட காலத்தில் மறைந் தோடித் தப்பிக் கொள்ள, நெடுந்தொலைவிற்குச் சுரங்கம் அல்லது சுருங்கையென்னும் கீழ் நில வழிகளும் இருந்தன.

கோட்டை கொட்ட (வ.) L.Castrum E.caster. chester (suffixes of place names).

புரம் - புர(வ)., OE.burg, burh OS. burg, OHG burug ON. burg, Gorh. baurgs, E. borough, Sc.burgh. புரி - புரீ(வ.), E.bury(sfx.of place-name பாழி = நகர் Gk.polis.

(9) பொறிவினை (Machinery)

வேந்தன் தன் உரிமைச் சுற்றத்தோடு இன்பமாய் நீராடுவதற்கு, வேண்டும்போது நீரை நிரப்பவும் வடிக்கவும் நீர்ப்பொறியமைந்த குளம் இருந்தது. அது இலவந்திகை யெனப்பட்டது.

"இலவந் திகையின் எயிற்புறம் போகி" (சிலப்.10:31)

"நிறைக்குறின் நிறைத்துப் போக்குறின் போக்கும்

பொறிப்படை யமைந்த பொங்கில வந்திகை” (பெருங்.1:40:311-2)

66

........வளைவிற் பொறியும்

கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும்

பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும்

காய்பொன் உலையும் கல்லிடு கூடையும்

தூண்டிலும் தொடக்கம் ஆண்டலை அடுப்பும்

கவையும் கழுவும்புதையும் புழையும்

ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும்

சென்றெறி சிரலும் பன்றியும் பணையும் எழுவும் சீப்பும் முழுவிறல் கணையமும் கோலும் குந்தமும் வேலும் பிறவும்"

மதுரை மதில்மேல் அமைக்கப்பட்ட பொறிகளாகும் (சிலப்.15: 207- 216). "பிறவும்” என்பவற்றை அடியார்க்கு நல்லார் நூற்றுவரைக் கொல்லி, தள்ளிவெட்டி, களிற்றுப்பொறி, விழுங்கும் பாம்பு, கழுகுப்பொறி, புலிப்