உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் வயின் - வயம் - வசம் - வசி வசியம். (16) மந்திரக் கட்டு இது தீ காற்று முதலிய இயற்கைப் பூதங்களையும், புலி நாய் பாம்பு முதலி உயிரிகளையும் மாந்தரையும், இயங்காதவாறும் தீங்கு செய்யதாத வாறும் மந்திரத்தால் தடுத்தல்.

  • கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்"

(17) மகிடி (மோடி) மாகும். (தாயு.தேசோ.8) இது மந்திரத்தாற் பொருள்களை மறைத்தலும் அவற்றை எடுத்தலு (18) பேயோட்டல் (Exorcism) பல்வகைப் பேய்களையும் கோடங்கி அல்லது உடுக்கடித்து, பேய் கோட்பட்டாரினின்று ஓட்டுதல் பேயோட்டல் ஆகும். (19) குறளி இது குட்டிப் பேயால் சிறு குறும்புகள் செய்வித்தல். (20) செய்வினை (Sorcery or Witchcraft) இது பேயை ஆளும் மந்திரக்காரனைக் கொண்டு, வேண்டாதவர்க்கு நோயும் சாக்காடும் வருவித்தல். இது சூனியம் என்றும் உலக வழக்கில் வழங்கும். சுல் - சூன் - சுன்னம் -சூன்ய (வ.) (21) கரவட நூல் இது களவு நூல். மந்திரம் தெய்வம் மருந்தே நிமித்தம் தந்திரம் இடனே காலம் கருவியென் றெட்டுட னன்றே இழுக்குடை மரபில் கட்டூண் மாக்கள் துணையெனத் திரிவது." என்பது (சிலப்.16:166-9), கரவட நூலின் கூறுகளைத் தெரிவிக்கும். நிமித்தம் தந்திரம் என்னும் வடசொற்கட்கு, புள் விரகு என்பன முறையே நிகர் தென்சொற்களாம்.