உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

(22) உடல் நூல்

137

மெய்ப் பொருள் தொண்ணூற்றாறேனும் பட்டாங்கு நூல் முறையிலும், மருத்துவ முறையிலும், புலாலுணவு முறையிலும், மற்போர் முறையிலும், உடற்கூறுகளைப் பண்டைத் தமிழர் நன்கறிந்திருந்தனர்.

(23) காவல் நூல்

நூல்வழிப் பிழையா நுணங்குநுண் தேர்ச்சி

ஊர்காப் பாளர்."

என்னும் மதுரைக் காஞ்சியடிகளையும் (646-7), அவற்றின் 'களவு காண்டற்கும் காத்தற்கும் கூறிய நூல்கள் போவார்" என்னும் உரையையும், நோக்குக.

15 அறிவியல்கள் (Sciences)

பெரும்பாலும் படிப்பினாற் கற்கப்படுவன அறிவியல்கள்.

(1) இலக்கணம்

இலக்கு-இலக்கியம். இலக்கு - இலக்கணம். இலக்கு = குறி, குறிக்கோள். சிறந்த வாழ்க்கைக் குறிக்கோளான அறத்தை எடுத்துக் காட்டுவது இலக்கியம். சிறந்த மொழிக் குறிக்கோளான அமைப்பை எடுத்துக் கூறுவது இலக்கணம்.

உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலன்எனக் கொள்ளும் என்ப குறியறிந் தோரே”

என்னும் தொல்காப்பிய நூற்பா (அகத்.47)இலக்கணத்தைக் குறியெனக் குறித்தல் காண்க.

இலக்கணத்திற்கு அணங்கம் என்றும், இலக்கியத்திற்கு அணங்கியம் என்றும் பெயருண்டு.

-

இலக்கு லக்ஷ்(வ.)., இலக்கியம் - லக்ஷ்ய (வ.) இலக்கணம் - லக்ஷ்ண - (வ.). இலக்கணம் இலக்கியம் என்னும் சொற்கள் போல், லக்ஷண லக்ஷ்ய என்னும் வடசொற்கள் மொழியமைதியையும் (Grammar) நூற்றொகுதியையும் (Literature) குறிப்பதில்லை; குறி அல்லது இயல்பு, குறிக்கப்பட்ட பொருள் என்னும் இரண்டையே குறிக்கின்றன. இலக்கணத்தையும் இலக்கியத்தையும் குறிக்க, வியாகரணம் (வ்யாகரண) சாகித்தியம் (ஸாஹித்ய) என்னும் சொற்களையே வடமொழியாளார் ஆள்கின்றனர்.