உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

இலக்கணம் இலக்கியம் என்னும் ரு சொற்களும் தொன்று று

தொட்டே தமிழில் வழங்கி வருகின்றன.

65

ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்

ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்

வழக்கி னாகிய உயர்சொற் கிளவி

இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல."

என்னும் தொல்காப்பிய நூற்பாவில் (510), இலக்கணம் என்னும் சொல் வந்திருத்தல் காண்க.

தமிழ் இலக்கணம், எழுத்து, சொல், பொருள், என முத்திறப்படும். பொருளில் யாப்பும் யாப்பில் அணியும் அடங்கும். பண்டை யிலக்கிய மெல்லாம் செய்யுளில் இருந்ததினால், உரைநடைக்கெனச் சிறப்பாய் இலக்கணம் வகுக்கப்படவில்லை. சொல்லிற்கே பொருளிருப்பதால், சொல்லிற்குப் பின்பு பொருளையே இலக்கணப் பகுதியாக எடுத்துக் கொண்டனர். பொருட்பகுதியின்றித் தமிழிலக்கணம் நிறைவுள்ளதாகாது.

தமிழைச் சரியாய் உணராத பிராமணத் தமிழ்ப் புலவர், பொருளிலக்கணத்தைப் பாட்டியல் என்று குறிக்கின்றனர். இலக்கியப் பொருள்கட்கு இலக்கணம் கூறுவதே பொருளிலக்கணம் என அறிக.

தமிழ் நெடுங்கணக்கு கால்டுவெலார் கூறியவாறு வடமொழி யைப் பின்பற்றியதன்று. வடமொழி நெடுங்கணக்கே தமிழைப் பின்பற்றிய தாகும்.

தமிழ் எழுத்து கீறெழத்தும் வெட்டெழுத்தும் என இருவகைப் பட்டது. முன்னது ஒலையெழுத்து; பின்னது பட்டய வெழுத்து. பட்டய வெழுத்தையே வட்டெழுத் தென்பர்.

இன்று அச்சிலுள்ள ஓலையெழுத்து தொன்று தொட்டு வருவதே.

66

தொல்லை வடிவின எல்லா எழுத்தும் ஆண்

டெய்தும் எகர ஒகரமெய் புள்ளி”.

என்று 13-ஆம் நூற்றாண்டு நன்னூல் (98) கூறுதல் காண்க. “ஆண்டு" என்றது முற்காலத்தை. எகர ஒகரம் புள்ளி பெற்றதே முற்கால எழுத்தின் வேறுபாடென்பது நன்னூலார் கருத்து. அவர் காலத்தில் எகர ஒகரம் புள்ளி பெறவில்லை; பெற்றிருக்குமாயின் அதை ஏன் கூற வேண்டும்? ஆதலால், அது உரையன்மை அறிக. 'அக்காலம்' என்பது இன்றும் முற்காலத்தைக் குறித்தல் காண்க.

எழுத்தாணி கொண்டு ஏட்டில் கீறியெழுதுவதற்கு வளை கோட்டெழுத்தும், உளிகொண்டு பட்டயத்தில் குழித்தெழுதுவதற்கு நேர்கோட்டெழுத்துமே, ஏற்றதாதல் காண்க.