உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

தமிழ்

வடமொழி

ஞாயிறு

ஆதித்தன்

திங்கள்

சோமன்

செவ்வாய்

(மங்களம்)

அறிவன்

புதன்

வியாழன்

பிருகஸ்பதி(குரு)

வெள்ளி

சுக்கிரன்

காரி

(+6019)

ஆங்கிலம்

Sun - Sunday

Moon-Monday

Mars-Tuesday

Mercury-Wednesday

Jupiter-Thusday

Venus-Friday

Saturn-Saterday

வடமொழிக்கிழமைப் பெயர்களுள், மங்கள வாரம், சனி வாரம் ஆகிய இரண்டு தவிர மற்றவையெல்லாம் நேர் மொழிபெயர்ப்பாயிருத்தல் காண்க.

ஆங்கிலப் பெயர்களுள், பின் ஐந்தும் பிற்காலத்தில் மாறி விட்டன. ஆயினும், எழுநாள் என்னும் கால அளவு மாறாதிருத்தல் காண்க.

செவ்வாய் செந்நிறமுள்ள தென்றும், வியாழன் பொன்னிறமுள்ள தென்றும், வெள்ளி வெண்மையானதென்றும், காரி கரியதென்றும், கண்டறிந்தது வியக்கத் தக்க செய்தியாம்.

வியல் = 1. பெருமை.

"மூழ்த்திறுத்த வியன்றானை"

2. அகலம்

“வியலென் கிளவி அகலப் பொருட்டே."

3.மிகுதி. (சிலப். 3,7, உரை).

வியல் - வியலன் - வியாழன்.

(பதிற். 33,5)

(தொல்.சொல் 354).

விள்ளுதல் = விரிதல், மலர்தல். விள் - விய் -வியல்.

பிருகஸ்பதி என்னும் வடசொல் வியாழன் என்பதன் மொழி பெயர்ப்பாயிருப்பதோடு, பெருகு என்னும் தென்சொல்லின் திரிபை நிலைமொழி முதனிலையாகக் கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.

பனினிரு ஒரைகள்

தமிழ்

வடமொழி

இலத்தீன்

மேழம்

மேஷம்

Aries