உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

(10) கணியம் (Astrology)

147

ஒருவர் பிறந்த நாளையும் வானத்திலுள்ள நாள்கோள் நிலை யையும் அடிப்படையாக வைத்து, அவருக்கு, வரும் இன்ப துன்பங்களை முற்படக் கணித்துக் கூறுவது கணியம். வாழ்நாள் முழுவதற்கும் வரையப்படும் கணியமே பிறப்பியம் (ஜாதகம்).

கோச்சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை இன்னநாள் இறப்பான் என்று, கூடலூர்கிழார் ஒரு விண்வீழ் கொள்ளியைக் கண்டு கணித்தறிந்த செய்தியை 229-ஆம் புறப்பாட்டுக் கூறும். நல்ல நாளும் வேளையும் பார்த்து வினைகளைத் தொடங்குவது, பண்டைநாளிற் பெருவழக்கமா யிருந்தது. நாளே ரடித்தல், குடைநாட்கோள், வாள்நாட் கோள் என்பன இதைத் தெரிவிக்கும்.

தொன்று தொட்டுக் கணியத் தொழில் செய்து வரும் தமிழ் வகுப்பான் வள்ளுவன். வள் கூர்மை. வள்ளுவன் கூர்மதியன். ஆரியக் குலப் பிரிவால், அவன் தாழ்த்தப்பட்டுப் பேரிடங்களிற் பெரும்பாலும் பிழைப் பிழந்தான்.

கண்ணுதல்

=

-

அகக்கண்ணாற் பார்த்தல், கருதுதல், மதித்தல். கண்ணியம் மதிப்பு. கண் கணி. கணித்தல் = மதித்தல், கணக்கிடுதல், அளவிடுதல். கணி - கணிதம் - கணிசம் கணிதம் - கணிசம் = மதிப்பு (Aprroximation). கணி கணிகை = தாளம் கணித்தாடுபவள். கணி - கணிகன். கணியன் = நாள் கோள் நிலைகண்டு வருங்கால நன்மை தீமை கணிப்பவன். கண், கணி, கணிதம், கணிகை என்னும் தென்சொற்கள், வடமொழியில் முதலெழுத் தெடுப் போசையுடன் வழங்குகின்றன. கணிதம் என்பது கணித என்றும், கணிகை என்பது கணிகா என்றும், ஈறு குன்றியும் திரிந்தும் வழங்கும்.

(11) கணக்கு

கள்ளுதல்

=

=

பொருந்துதல், ஒத்தல், கூடுதல், கள்ள ஒக்க (உவம உருபு), கள் - களம் = கூடுமிடம். கள் - கள - கண. கணத்தல் பொருந்துதல், கூடுதல், ஒத்தல். கணக்க = = போல. குரங்கு கணக்க ஓடுகிறான் என்னும் வழக்கை நோக்குக. கண - கணம் = கூட்டம். கணவன் கூடுகின்றவன். கண - கணக்கு = கூடிய தொகை, அளவு

=

கணக்கு என்பது முதலில் கூட்டல் கணக்கை மட்டும் குறித்து, பின்பு நால்வகைக் கணக்கிற்கும் பொதுப்பெயராயிற்று.

பண்டைத் தமிழர் கணக்கில் மிகத் தேர்ந்தவர் என்பது, அவர் கையாண்ட நுண்ணிய அளவைகளால் அறியப்படும்.