உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

,

இருபத்தேழு நாட்களும், புரவி, அடுப்பு, ஆரல், சகடு, மான்றலை, மூதிரை, கழை, கொடிறு, அரவு, கொடுநுகம், கணை, உத்தரம், கை, அறுவை, விளக்கு, முறம், பனை, துளங்கொளி, குருகு, முற்குளம், கடைக்குளம், முக்கோல், காக்கை, செக்கு, நாழி, முரசு, தோணி எனப் பெயர் பெற்றிருந்தன. இவற்றிற்குப் பிற பெயர்களுமுண்டு. இவையல்லாத பொது உடுக்கள் வெள்ளி யெனப்பட்டன. புகைக்கோள் (Comet) வால் வெள்ளி யெனப்பட்டது.

ஒரு பகலும் ஓர் இரவும் சேர்ந்தது ஒரு நாள் என்றும் ஏழு நாள் கொண்டது ஒரு கிழமையென்றும், ஒரு வளர்பிறையும், ஒரு தேய்பிறையும் சேர்ந்தது ஒரு மாதம் என்றும், கதிரவன் பன்னீரோரைக் குள்ளும் புகுவது பன்னிரு மாதம் என்றும், அதன் ஒரு வட செலவும் ஒரு தென் செலவும் சேர்ந்து ஓர் ஆண்டென்றும், கணக்கிடப்பட் டிருந்தது. ஒரு நாளை ஆறு சிறு பொழுதாகப் பிரித்தது போன்று, ஓர் ஆண்டை ஆறு பெரும் பொழுதாகப் பிரித்திருந்தனர்.

ஒரு கோநகர்த் தோற்றம் அல்லது ஒரு பேரரசன் பிறப்புப் போன்ற நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, தொடராண்டு கணித்து வந்ததாகத் தெரிகின்றது.

66

செஞ்ஞா யிற்றுச் செலவும் அஞ் ஞாயிற்றுப்

பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்

வளிதிரி தரு திசையும்

வறிது நிலைஇய காயமும் என்றிவை

சென்றனந் தறிந்தோர் போல என்றும் இனைத்தென் போரும் உளரே”

என்னும் (புறம்.30) உறையூர் முதுகண்ணன் சாத்தனார் கூற்றும், "மாகவிசும்பு" (புறம். 35, அகம். 253, மதுரைக்கா. 454, பரி. 1) என்னும் வழக்கும், "மாகமாவது பூமிக்கும் சுவர்க்கத்துக்கும் நடுவு" என்னும் பரிமேலழகர் உரையும்,

66

66

இன்னிசை யெழிலியை இரப்பவும் இயைவதோ"

வளிதரும் செல்வனை வாழ்த்தவும் இயைவதோ?”

என்னும் பாலைபாடிய பெருங்கடுங்கோவின் பாட்டடிகளும் (கலித்.15), கவனிக்கத் தக்கன.

மழைக்கும் காற்றிற்கும் கதிரவன் கரணியம் என்பதை முன்னைத் தமிழர் கண்டிருந்தனர். எழிலி முகில். எழிலியைத் தோற்றவிக்கும் கதிரவனை எழிலி என்றது இலக்கணையென்னும் ஆகுபெயர்ப் போலி.