உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

படுத்திற்று. அதை அவ்வரசனும் ஓர் உயர்திணைச் செயல் போன்றே ஏற்று, தன் ஒரே மகன்மீது தேரோட்டி முறை செய்தான். இத்தகைய செய்தி வேறெந்நாட்டு வரலாற்றிலுமில்லை. பண்டைத் தமிழ் வேந்தர் மூவரும் இங்ஙனமே தம்மையுந் தம் மக்களையும் நடுநிலையாய்த் தண்டனைக் குள்ளாக்கி வந்தனர்.

வெள்ளைக்குடி நாகனார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப்பாடி, தம் நிலவரி நிலுவை நீக்கப்பெற்றார்.

கூனர் குறளர் ஊமையர் செவிடர் முதலிய எச்சப்பிறவியர் அரண்மனைகளில் அரசியர் இருக்கும் உவளகங்களில் குற்றேவல் செய்ய அமர்த்தப் பெற்றனர்.

கூனும் குறளும் ஊமும் கூடிய

குறுந்தொழில் இளைஞர் செறிந்துசூழ்தர

கோப்பெருந் தேவி சென்றுதன் தீக்கனாத் திறமுரைப்ப"

(சிலப். 20:17-21)

பல்வேறு சமயக் குரவர் தத்தம் சமயமே உண்மையென்று மக்களை மயக்கி வந்ததால், அவற்றின் உண்மை காண்பதற்கு அரசர் பட்டி மண்டபம் என்னும் தருக்க மண்டபத்தை அமைத்து, எல்லாச் சமய ஆசிரியரையும் அதில் ஏறித் தத்தம் சமய உண்மையை நாட்ட ஏற்பாடு செய்திருந்தனர்.

66

ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்

பட்டிமண் டபத்துப் பாங்கறிந் தேறுமின்"

என்று, காவிரிப்பூம்பட்டினத்தில் வேந்தன் (இந்திர) விழாவை அரசன் ஏவலாற்பறையறைந்தறிவித்த வள்ளுவன் கூறினமை காண்க. (மணி.1:61).

போர்வினையில் முதலிலிருந்து முடிவுவரை பல்வேறு அறங்கள் கடைப்பிடிக்கப்பட்டன. வேற்று நாட்டைக் கொடுங்கோல் அரசர் ஆட்சி யினின்று விடுவிக்கச் செய்யும் அறப்போராயினும், மண்ணாசை யாற் பிற நாட்டின் மேற் படையெடுத்துச் சென்று தாக்கும் மறப்போராயினும், வேற்று நாட்டு முல்லை நிலத்திலுள்ளனவும் தீங்கற்றனவும் தீங்கு செய்யத் தாகதனவுமான ஆவின் மந்தைகளை, போரிற்சேத முறாதபடி தப்புவித் தற்கு, போர்தொடங்கும் அரசன் தன் படையை ஏவிக் களவாகக் கவர்ந்து கொண்டு வரச் செய்து காப்பது வழக்கம். இது பொருளிலக்கணத்தில் புறப்பொருட் பகுதியில் வெட்சித்திணை யெனப்படும்.