உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ்ப் பண்பாடு

171

குடிபுர வுண்டும் கொடுங்கோல் அஞ்சி

மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்ப மல்லது தொழுதக வில்.”

" மாரி பொய்ப்பின் வாரி குன்றினும்

(சிலப். 215 100-109)

இயற்கை யல்லன் செயற்கையில் தோன்றினும்

காவலர்ப் பழிக்கும் இக் கண்ணகன் ஞாலம்”

(புறம்.35).

அரசர் குடிகளிடத்து அன்பு கொண்டிருந்ததனால், காட்சிக் கெளி யராயும் கடுஞ்சொல்லர் அல்லராயும் இருந்தனர். இது கண்ணகி வழக்காட்டினின்று நன்கு புலனாகின்றது.

செங்கோல் அரசர் தம் ஆட்சியும் உயிரும் இழக்கினும், வாய்ச் சொல் தவறுவதில்லை யென்பது, மாவலி என்னும் சேரமாவேந்தன் செய்தியினின்று அறியலாம்.

நடுநிலையாகக் குடிகளின் வழக்குத் தீர்த்து முறை வழங்கும் பொருட்டு, வழக்குக்களின் உண்மை காண்பதற்கு, மாறுகோலம் பூண்டு நகர் முழுதுஞ் சுற்றிப் பொதுமக்கள் பேச்சைக் கவனித்தறிவதும், வழக் கிழந்தவர் தம்மிடம் முறையிட அரண்மனை வாயிலில் ஆராய்ச்சிமணி கட்டி வைப்பதும்,தெய்வச்சான்று வாயிலாய்த் தம் கூற்றை மெய்ப்பிப்பாரை ஊக்குவிப்பதும், எவ்வகையிலும் துப்புத் துலங்காத வழக்கின் உண்மையை அறிவிக்குமாறு இறைவனை வேண்டுவதும், பண்டைத் தமிழரசர் கையாண்ட வழிகளாகும்.

குற்றங்கட்குத் தண்டனை, இரப்போனென்றும் புரப்போ னென்றும் வேறுபாடுகாட்டாது நடுநிலையாய் நிறைவேற்றப்பட்டது. கொற்கைப் பாண்டியன் தன்கை குறைத்ததும், மனுமுறை கண்ட சோழன் தன் மகன் மேல் தேரைச் செலுத்திக் கொன்றதும், இதை வலியுறுத்தும்.

நாள்தோறும் காலையில் முரசறைவித்துக் கொடை வழங்கி யதுடன், அவ்வப்போது சிறு சோற்று விழாவும் அரசர் நடத்தி வந்தனர். ஊன் சோற் றுருண்டை வந்தவர்க்கெல்லாம் வழங்குவது சிறு சோற்று விழாவாகும்.

அரசர் தம் பிறந்தநாட் கொண்டாட்டமாகிய வெள்ளணி விழா வன்று, சிறையாளிகளை விடுதலை செய்வது வழக்கம்.

66

'அடித்தளை நீக்கும் வெள்ளணியாம்" (சிலப். 27.229)

அரசர் அறிஞரின் அறிவுரைகட்குச் செவிசாய்த்ததோடு, அவர் சொன்ன குறைகளையும் நீக்கிவந்தனர்.

மனுமுறை கண்ட சோழன் தலைநகராகிய திருவாரூரில் கட்டப் பெற்றிருந்த ஆராய்ச்சி மணியை, கன்றையிழந்த ஓர் ஆவும் பயன்