உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

கொற்றம் வெற்றி. அரசாட்சி நிழல் என்றும், அரசாட்சிக் குட்பட்ட நாடு குடை நிழல் என்றும் பெயர் பெற்றன.

66

உறுதுப் பஞ்சா துடல்சினம் செருக்கிச்

சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமம் சிதையத் தாக்கி முரசமொடு ஒருங்ககப் படேஎ னாயின் பொருந்திய என்நிழல் வாழ்நர் செல்நிழல் காணாது

கொடியன்எம் இறையெனக் கண்ணீர் பரப்பிக்

குடிபழி தூற்றம் கோலேன் ஆகுக.'

என்பது, பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வஞ்சினம் (புறம்.72).

66

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர்.'

என்றார் திருவள்ளுவர் (குறள். 1034).

ஆட்சி நேர்மையாயிருக்க வேண்டும் என்பதை உணர்த்த அரசன் கையில் ஒரு செங்கோல் இருந்தது. செங்கோல் நேரான கோல். குடிகளைத் துன்புறுத்திய ஒரு சிலர் செங்கோல் பிடிப்பினும், கொடுங்கோலர் எனப் பழிக்கப்பட்டார்.

அரசன் முறை (நீதி) தவறி ஆண்டால் அவன் நாட்டில் மழை பெய்யாதென்றும், அரசனும் குடிகளும் உயிரும் உடம்பும் போல நெருங்கிய தொடர்புடையவ ரென்றும், இரு கருத்துக்கள் அக்காலத்து மக்கள் உள்ளத்தில் வேரூன்றியிருந்தன.

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு."

(குறள். 545)

66

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்.”

(குறள். 559)

66

66

கோல்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும் கோள்நிலை திரிந்திடின் மாரிவறங் கூரும் மாரிவறங் கூரின் மன்னுயிர் இல்லை மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன்

தன்னுயிர் என்னும் தகுதியின் றாகும்."

மழைவளம் கரப்பின் வான்பே ரச்சம்

பிழைஉயிர் எய்தின் பெரும்பே ரச்சம்

(LD6A 7;8-12)