உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

சேரமான் கணைக்கா லிரும்பொறை சோழன் செங்கணானோடு பொருது சிறைப்பட் டிருந்தபோது, தண்ணீர் கேட்டுக் காலந் தாழ்த்துப் பெற்றதினாற் பருகாது இறந்தான்.

அக்காலத்தரசர் சிறந்த புலவராயும் பாவலராயும் இருந்தனர். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், பூதப் பாண்டியன், சேரமான் கணைக்காலிரும்பொறை, பாலைபாடியபெருங் கடுங்கோ முதலியோர் பாடியுள்ளவை சிறந்த பாமணி களாகும். சேரமான் தகடூரெறிந்த பெருஞ் சேரலிரும்பொறை, முரசு கட்டிலின் மேல் அறியாது ஏறித்துயின்ற மோசிகீரனார்க்கு, அவர் எழுமளவும் கவரி வீசியதும் பண்பாட்டுச் செயலே.

முத்தமிழ் வேந்தருள்ளும் பாண்டியன் செங்கோற்குச் சிறந்தவன் என்றும், அவன் நாடு தீங்கற்றதென்றும், நாற்றிசையும் பேரும் புகழும் பரவியிருந்தது.

66

மன்பதை காக்கும் நீள் குடிச் சிறந்த தென்புலங் காவலின் ஓரீஇப்பிறர்

வன்புலங் காவலின் மாறியான் பிறக்கே”

என்பது பூதப்பாண்டியன் வஞ்சினம். (புறம். 71).

தென்னவன் நாட்டுச் சிறப்பும் செய்கையும் கண்மணி குளிர்ப்பக் கண்டேன் ஆதலின் வாழ்த்திவந் திருந்தேன் இதுவென் வரவு"

என்பது மாங்காட்டு மறையோன் கூற்று. (சிலப். 11:54-56).

66

கடுங்கதிர் வேனில்இக் காரிகை பொறாஅள்

படிந்தில சீறடி பரல்வெங் கானத்துக்

கோள்வல் உளியமும் கொடும்புற் றகழா வாள்வரி வேங்கையும் மான்கணம் மறலா அரவும் சூரும் இரைதேர் முதலையும் உருமும் சார்ந்தவர்க் குறுகண் செய்யா செங்கோல் தென்னவர் காக்கும் நாடென எங்கணும் போகிய இசையோ பெரிதே பகலொளி தன்னினும் பல்லுயிர் ஓம்பும் நிலவொளி விளக்கின் நீளிடை மருங்கின் இரவிடைக் கழிதற் கேதம் இல்.'

என்பது கோவலன் கூற்று (சிலப். 13:3-12).