உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ்ப் பண்பாடு

" பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட யானோ அரசன் யானே கள்வன்

மன்பதை காக்கும் தென்புலங் காவல்

என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுள்என மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே.

என்றது ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனை(சிலப். 20: 74-78). 4. வணிகர் பண்பாடு

அக்காலத்து வாணிகர்,

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோற் செயின்."

175

என்னும் (குறள். 120) நெறியைக் கடைப் பிடித்து, நடுநிலை பூண்டு நல்லுள்ளத்தினராய்ப் பிறர் பொருளையும் தமது போற்பேணி, தாம் கொள்ளும் சரக்கையும் தாம் கொடுக்கும் விலைக்கு மிகுதியாகக் கொள்ளாது தாம் கொடுக்கும் சரக்கையும் தாம் கொண்ட விலைக்குக் குறையக் கொடாது, குற்றத்திற் கஞ்சி உண்மையான விலை சொல்லிப் பல்வேறு நாட்டு அரும்பொருள்களைவிற்று, பேராசையின்றி நேர்மையாகப் பெரும் பொருளீட்டிப் பல்வேறு அறஞ்செய்து, வாழ்ந்து வந்தனர்.

C

நெடுநுகத்துப் பகல்போல

நடுவுநின்ற நன்னெஞ்சினோர்

வடுவஞ்சி வாய்மொழிந்து

தமவும் பிறவும் ஒப்ப நாடிக்

கொள்வதூஉம் மிகைகொளாது கொடுப்பதூஉம் குறை கொடாது

பல்பண்டம் பகர்ந்துவீசும்

தொல்கொண்டித் துவன்றிருக்கை."

(பட்டினப்.206-212)

66

அறநெறி பிழையா தாற்றின் ஒழுகி

............

சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும்" (மதுரைக்கா. 500-506)

அறநெறியிற் பொருளீட்டுதலே அக்கால வாணிகர் குறிக்கோள் என்பது, "மூன்றின் பகுதி” என்னும் துறையால் (தொல். அகத் . 41) அறியப்படும். மூன்றன் பகுதியாவது, அறத்தாற் பொருளீட்டி அப் பொருளால் இன்பம் நுகர்வேன் எனல்.

கோநகர்க் கடை மறுகில், எப்பொருள் அங்கு விற்கும் என மக்கள் மயங்காதபடி, ஒவ்வொருவகைக் கடைக்கும் ஒவ்வொரு வகையான கொடி கட்டப்பட்டிருந்தது.