உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

66

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

சாத ரூபம் கிளிச்சிறை ஆடகம்

சாம்பூ நதமென ஓங்கிய கொள்கையில்

பொலந்தெரி மாக்கள் கலங்கஞர் ஒழித்தாங்கு

இலங்குகொடி யெடுக்கும் நலங்கிளர் வீதியும்." (சிலப். 14: 201-4)

" கள்ளின் களிநவில் கொடி”

(மதுரைக்கா.372)

வெளிநாட்டு வணிகரும் இம் முறையைக் கையாண்டனர்.

கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள் வேலைவா லுகத்து விரிதிரைப் பரப்பில்

கூலமறுகில் கொடியெடுத்து நுவலும் மாலைச்சேரி"

(சிலப். 6:130-3)

வணிகம் செய்து வண் பொருள் ஈட்டாது கணிகையொடு கூடிக் கைப்பொருள் தொலைத்த கோவலனும், பல பேரறங்கள் செய்து வந்தமை பின்வரும் பகுதிகளால் அறியப்படும்.

66

66

மாமுது கணிகையர் மாதவி மகட்கு நாம நல்லுரை நாட்டுதும் என்று

மணிமே கலையென வாழ்த்திய ஞான்று மங்கல மடந்தை மாதவி தன்னொடு செம்பொன் மாரி செங்கையிற் பொழிய"

பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக

தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத் தானம் செய்தவள் தன்துயர் நீக்கிக்

கானம் போன கணவனைக் கூட்டி

ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து

(சிலப். 15:25-41)

நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ!”

பட்டோன் தவ்வை படுதுயர் கண்டு

கட்டிய பாசத்துக் கடிதுசென் றெய்தி என்னுயிர் கொண்டீங் கிவனுயிர் தாஎன

............

ஒழிகநின் கருத்தென் உயிர்முன் புடைப்ப அழிதரும் உள்ளத் தவளொடும் போந்தவன் சுற்றத் தோர்க்கும் தொடர்புறு கிளைகட்கும் பற்றிய கிளைஞரின் பசிப்பிணி யறுத்துப் பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல்!"

(சிலப்.54-75)

(சிலப்.80-90)