உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ்ப் பண்பாடு

" பண்ணியம் அட்டியும் பசும்பதம் கொடுத்தும்

புண்ணியம் முட்டாத் தண்ணிழல் வாழ்க்கை"

177

என்று, பட்டினப்பாலை (203-4) பொதுப்படக் கூறுவதினின்று, அறவைச் சோறு அளிக்கும் ஊட்டுப்புரை யமைத்தல், வெளியூரார் தங்கச் சத்திரம் சாவடி போன்ற தாவளங்கள் கட்டுதல், வழிப் போக்கர்க்குச் சோலையொடு கூடிய குளம் வெட்டுதல் முதலிய அறங்கள், அக்காலத்துப் பெருவணிகராற் செய்யப்பட்டிருந்திருக்கும் என உய்த்துணரலாம்.

66

கருமமும் உள்படாப் போகமுந் துவ்வாத் தருமமும் தக்கார்க்கே செய்யா -ஒருநிலையே

முட்டின்றி மூன்றும் முடியுமேல் அஃதென்ப பட்டினம் பெற்ற கலம்."

5. வேளாளர் பண்பாடு

(நாலடி. 250)

வேளாளர் உழுதுண்பாரும் உழுவித்துண்பாரும் என இரு வகையர். முன்னவர் சிறு நிலக்கிழார்; பின்னவர் பெரு நிலக்கிழார்.

வேளாளரின் சிறந்த பண்பு விருந்தோம்பல், அதனாலேயே உழவன் வேளாளன் எனப்பெற்றான். உழவுத் தொழிலும் வேளாண்மை எனப்பற்றது. "வேளாளன் என்பான் விருந்திருக்க வுண்ணாதான்”

(திரிகடுகம், 1 12)

விருந்தென்றது உறவினரும் நண்பருமன்றிப் புதிதாய் வருபவரை.

உரன்கெழு நோன்பகட் டுழவர் தங்கை

தொடிக்கை மகடூட மகமுறை தடுப்ப"

என்றது (சிறுபாண்: 190-2) புதியோரையே.

66

செட்டி மக்கள் வாசல்வழிச் செல்லோமே செக்காரப் பொட்டிமக்கள் வாசல்வழிப் போகோமே -முட்டிபுகும் பார்ப்பார் அகத்தை யெட்டிப் பாரோமே எந்நாளும் காப்பாரே வேளாளர் காண்."

என்று கம்பர் பாடியதும் இது பற்றியே.

66

புறஞ்சிறை மாக்கட் கறங்குறித் தகத்தோர்

புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்

பூம்போது சிதைய வீழ்ந்தென”