உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

என்னும் புறப்பாட்டடிகள் (28:11-13), "கரும்பு தின்னக் கைக்கூலியா?" என்னும் பழமொழியைத் தோற்றுவித்த காவிரிப்பூம்பட்டினத்து வேளாளன் செயலை நினைவுறுத்தும்.

பிராமணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் நால் வகுப்பாருள்ளும், வேளாளனே அமைச்சுத் தொழிற்குச் சிறந்தவன் என்று குலோத்துங்கச் சோழனிடம் ஔவையார் கூறியதும், வேளாளரின் வேளாண்மை பற்றியே.

66

நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம்

கோலெனிலோ ஆங்கே குடிசாயும் - நாலாவான் மந்திரியும் ஆவான் வழிக்குத் துணையாவான் அந்த அரசே அரசு."

உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றாது எழுவாரை யெல்லாம் பொறுத்து.'

என்பதும் (குறள்.1032) பண்பாடு குறித்ததே.

வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்."

(தனிப்பாடல்)

என்னுங் குறள் (85), வேளாளரின் விருந்தோம்பற் சிறப்பைக் குறிப்பாய் உணர்த்தும்.

6. பிறவகுப்பார் பண்பாடு

66

உறுவரும் சிறுவரும் ஊழ்மா றுய்க்கும் அறத்துறை யம்பியின் மான”

என்று நன்னாகனார் கூறுவதால் (புறம். 381), ஓடக் கூலி கொடுக்க இயலாத எளியாரையும் இரப்போரையும், இலவசமாக ஆறு கடத்தும் அறவோடங்களும் அக்காலத்திருந்தமை அறியப்படும்.

கள்வர் பண்பாடு

முதுலிய

பாலை நிலத்தில் வாழ்ந்த கள்வர் மறவர் எயினர் வேட்டுவர் வகுப்பினர், ஓருணவும் விளையாத கடுங் கோடைக்காலத்தில் வழிப்பறியையும் கொள்ளையையும் களவையும் மேற்கொள்ள நேர்ந்தது. அங்ஙனம் நேரினும், பண்பாட்டைக் கைவிடவில்லை. தெய்வ வணக்கம், எளியார் பொருளைக்கவராமை, புலவரையும் முனிவரையும் போற்றல், விருந்தோம்பல், அரசப்பற்று, ஈகையாளரைக் காத்தல் முதலிய நற்கொள்கைகளைக் கடைப்பிடித்தனர்.

பட்டினத்தடிகள் துளுவநாட்டுக் கோகரணத்தில் பிள்ளையார் கோயிலில் ஓகத்திலிருந்தபோது, அந்நகர மன்னரான பத்திரகிரியாரின்